Homemade Moisturizer: குறைந்த செலவில் வீட்டிலேயே மாஸ்சரைஸர் தயாரிக்கலாம்

உலர்ந்த சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் மிகவும் பயனுள்ளது. ஆனால், கடைகளில் கிடைக்கும் மாஸ்சரைஸர்  அதிக விலை கொண்டதாக இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2021, 06:19 PM IST
  • தேன் மற்றும் கிளிசரின் இரண்டும் வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதில் சிறந்தது.
  • மேலும் சந்தையில் கிடைக்கும் மாயிஸ்சரைசர்களை விட வீட்டில் தயாரிப்பது அதிக சிறப்பானது.
  • வீட்டிலேயே எளிதாக மிக குறைந்த செலவில் மாய்ஸ்சரைஸர் தயாரிக்கலாம்
Homemade Moisturizer: குறைந்த செலவில் வீட்டிலேயே மாஸ்சரைஸர் தயாரிக்கலாம் title=

உலர்ந்த சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் மிகவும் பயனுள்ளது. ஆனால், கடைகளில் கிடைக்கும் மாஸ்சரைஸர்  அதிக விலை கொண்டதாக இருக்கிறது. ஆனால், கவலையில்லை வீட்டிலேயே எளிதாக மிக குறைந்த செலவில் மாஸ்சரைஸர் தயாரிக்கலாம்.

மாயிஸ்சரைஸர் சருமத்திற்கு இழந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும் (Skin Care) இளமையாகவும் வைத்திருக்கிறது. ஆனால், கடைகளில் கிடைக்கும் மாஸ்சரைஸர்  அதிக விலை கொண்டதாக இருக்கிறது. ஆனால், கவலையில்லை வீட்டிலேயே எளிதாக மிக குறைந்த செலவில் மாய்ஸ்சரைஸர் தயாரிக்கலாம். மேலும் சந்தையில் கிடைக்கும் மாயிஸ்சரைசர்களை விட வீட்டில் தயாரிப்பது அதிக சிறப்பானது. ஏனெனில் அதில் ஒரு சிறிய அளவு ரசாயனங்கள் கூட இல்லை. வீட்டில் மாயிஸ்சரைசர் தயாரிப்பதற்கான எளிதான வழியை அறிவோம்.

வீட்டில் மாஸ்சரைசர் செய்வது எப்படி

நீங்கள்  வறண்ட சருமத்திற்கான மாஸ்சரைஸரை  வீட்டில் தயாரிக்க விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளைப் பயன்படுத்தவும்.

கற்றாழை மாய்ஸ்சரைசர் (Aloevera Moisturizer)

கற்றாழை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலிருந்து மாஸ்சரைசர் தயாரிக்க, நீங்கள் 1/4 கப் தேங்காய் எண்ணெய், 1/4 கால் பாதாம் எண்ணெய், 12 டீஸ்பூன் தேன் மெழுகு ஆகியவற்றை சூடாக்கி உருக வைக்கவும். இந்த எண்ணெயை குளிர்ந்த பிறகு, அதில் 1 கப் கற்றாழை ஜெல் மற்றும் 10 சொட்டு ஏதேனும் எஸன்ஷியல் ஆயில்லை சேர்க்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்டை ஃப்ரிட்ஜில் ஏதேனும் ஒரு டப்பாவில் நிரப்பிய வைக்கவும். தேவைக்கேற்ப அவ்வப்போது எடுத்து சருமத்தில் தடவவும்.
வறண்ட சருமத்திற்கு தேன் மெழுகு மாயிஸ்சரைஸர்

ALSO READ | Weight Loss: என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்

இந்த வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க, 1/4 கப் தேன் மெழுகு ஒரு பாத்திரத்தில் உருகி, அது குளிர்ந்ததும், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதற்குப் பிறகு, 10 சொட்டு ஏதேனும் எசன்ஷியல் ஆயிலை  சேர்த்து கலந்து, பின்னர் தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.

வறண்ட சருமத்திற்கான தேன் மற்றும் கிளிசரின் (Honey and Glycerin for dry skin)
தேன் மற்றும் கிளிசரின் இரண்டும் வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதில் சிறந்தது.  2 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கிரீன் டீ மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்கவும். பின்னர் அதை இரவில் சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். மறுநாள் காலையில் அதை தண்ணீரில் கழுவ வேண்டும்.

இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இது பொதுவான தகவல்களை கொடுக்கம் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ:Health News: கொண்டைக் கடலையின் அற்புதமான ஊட்டச்சத்துகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News