Encashment of EL: புதிய ஊதியக் குறியீட்டில் அதிக விடுமுறைகளை பணமாக்கலாம்

New Wage Code 2022: ஈட்டிய விடுப்பில் மாற்றம் இருக்கலாம்! விடுமுறைகளை பணமாக மாற்றும் வசதி அதிகமாகும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 5, 2022, 01:20 PM IST
  • சம்பளம் முதல் அலுவலக வேலைநேரம் வரை அனைத்தும் மாறுகிறது
  • அதிகபட்ச வேலை நேரம் 12 மணிநேரமாக உயரலாம்
  • பணிஓய்வு பெறும்போது அதிக தொகை கிடைக்கும்
Encashment of EL: புதிய ஊதியக் குறியீட்டில் அதிக விடுமுறைகளை பணமாக்கலாம் title=

புதுடெல்லி: புதிய ஊதியக் குறியீட்டிற்கான காத்திருப்பு முடிவுக்கு வந்த நிலையில் புதிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. கிடைத்தத் தகவல்களின்படி, புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டாக அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. புதிய ஊதியக் குறியீட்டில் 4 தொழிலாளர் குறியீடுகளை ஒன்றாகக் கொண்டுவரப்படுகிறது.

புதிய தொழிலாளர் சட்டங்களில் (New Wage Code 2022) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈட்டிய விடுப்பு ( Earned leave) தொடர்பான விதிகளில் மாறுதல் வருகிறது.
 
ஈட்டிய விடுப்பு மாறலாம்
புதிய தொழிலாளர் சட்டம் 2019ம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பிறகு மாநிலங்களின் தரப்பில் இருந்து தாமதம் ஏற்பட்டதால் அமல்படுத்தப்படுவது தாமதமாகிக் கொண்டிர்நுத நிலையில், இந்த ஆண்டு (2022)  ஜூலை-ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ஒரு ஈட்டிய விடுப்பு தொடர்பாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதன்படி, புதிய ஊதியக் குறியீடு, அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு விஷயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தற்போது அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுக்கு 30 விடுமுறைகள் கிடைக்கின்றன.

அதே நேரத்தில், பாதுகாப்பிற்காக ஒரு வருடத்தில் 60 விடுமுறைகள் கிடைக்கின்றன. இந்த விடுமுறைகளுக்குப் பதிலாக பணமாக வழங்குவதற்கான ஏற்பாடு இருக்கலாம்.

மேலும் படிக்க | New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம்

எத்தனை விடுமுறை நாட்களை பணமாக மாற்றலாம்?
தற்போதைய விதிகளின்படி, உங்கள் விடுமுறையை பயன்படுத்தாவிட்டால், மொத்தம் 300 விடுமுறைகளுக்கு பணம் கிடைக்கும். ஆனால் புதிய ஊதியச் சட்டம் 2022ல் இந்த விடுமுறை நாட்களை 300லிருந்து 450 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழிலாளர் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. தற்போது பல்வேறு துறைகளில் 240 முதல் 300 விடுமுறைகளை பணமாக்கிக் கொள்ளும் வசதி உள்ளது.
 
விடுமுறைக்கு பதிலாக பணம் கிடைக்கும்
ஆதாரங்களை நம்புவதாக இருந்தால், புதிய ஊதியக் குறியீடு 2022 இல், அரசாங்கம் ஈட்டிய விடுப்பின் வரம்பை 300ல் இருந்து 450 ஆக அதிகரிக்கலாம். அதாவது ஊழியர்கள் தங்கள் 450 விடுமுறைகளை சேமித்தால், அந்த விடுமுறைகளுக்குப் பதிலாக பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும், பணிக்கு சேர்ந்த 20 வருடங்களுக்குப் பிறகுதான் இந்த விடுமுறைகளை பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.
 
சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும்
புதிய ஊதியக் குறியீடு 2022 இல் சம்பள அமைப்பு தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர் சங்கம் இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு, புதிய வரைவுகள் தயாரிக்கப்பட்டன.

மேலும் படிக்க | பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா? 

தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, மொத்த CTC-யில் 50% அடிப்படை சம்பளத்திலும், 50% அலவன்ஸிலும் வைத்திருப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், இப்போது கட்டமைப்பில் சிறிது மாற்றம் இருக்கலாம். ஆதாரங்களின்படி, புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், உதவித்தொகையின் பகுதி நேரடியாக 50% ஆக வைக்கப்படாது. மாறாக படிப்படியாக அதிகரிக்கப்படும்.
 
கொடுப்பனவுகள் 
 புதிய சம்பள அமைப்பில் 50% அலவன்ஸ் அறிமுகப்படுத்தப்படுவதை தொழில்துறையினர் எதிர்த்தனர். எனவே இது மாற வாய்ப்புள்ளது. புதிய தொழிலாளர் குறியீட்டில் அடிப்படை ஊதியம், அகவிலைப்படிகள் (DA) மற்றும் தக்கவைப்பு கொடுப்பனவுகளும் அடங்கும் என்று பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் கூறுகிறார்.
 
எந்த கொடுப்பனவுகள் சேர்க்கப்படாது?
புதிய ஊதியக் குறியீடு 2022 இல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் ஓவர் டைம் (கூடுதல் நேரம் பணியாற்றியது) கொடுப்பனவுகள் சேர்க்கப்படாது. கொடுப்பனவை சம்பளத்திற்குள் உள்ளடக்கியதன் மூலம், பணியாளரும் முதலாளியும் வருங்கால வைப்பு நிதிக்கு அதிக பங்களிப்பை செலுத்த வேண்டியிருக்கும்.  

மேலும் படிக்க | Fixed Deposit-ல் டெபாசிட் செய்யணுமா? இந்த வங்கியில் கிடைக்கும் அசத்தும் விகிதங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News