இந்த புது வருடத்தை வித்தியாசமாக கொண்டாடலாம்! எப்படி தெரியுமா?

இந்த 2023ஆம் வருடம் விரைவில் முடிவடைய போகிறது. வரும் புது வருடத்தை புது வகையில் கொண்டாட சிறப்பான வழிகள், இதோ! 

Written by - Yuvashree | Last Updated : Dec 28, 2023, 06:00 PM IST
  • 2024 வருடம் பிறக்கப்போகிறது
  • இதை வித்தியாசமான முறையில் கொண்டாடலாம்.
  • எப்படி தெரியுமா?
இந்த புது வருடத்தை வித்தியாசமாக கொண்டாடலாம்! எப்படி தெரியுமா?  title=

புது வருடங்கள் அனைத்தும் புதிய தொடக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும். சிலருக்கு, இது எப்போதும் போன்ற ஒரு வருடம்தான் என்று தோன்றலாம். சிலருக்கு இந்த புது வருடம் பல புதிய வாய்ப்புகளுக்கான வாயிலாக தோன்றலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் புது வருடம் என்றால் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இந்த வருடம் பிறக்கும் போது மட்டும் யாரும் கொண்டாடுவதை நிறுத்துவதில்லை. அப்படி, புது வருடத்தை வரவேற்க வித்தியாசமாக வழிகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? 

கூட்டாக யோகா செய்வது:

புது வருடத்தில் ஃபிட்டாக மாற வேண்டும் என்று மனதில் எண்ணம் வைத்திருந்தாலும் அல்லது ஏற்கனவே உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் உங்களது புது வருடத்தை கூட்டு யோகா பயிற்சி மூலம் ஆரம்பிக்கலாம். யோகா செய்வதற்கென்று பல குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து கொள்ளலாம். அல்லது உங்களை போல யோக செய்ய பிடித்த நபர்களை சேர்த்துக்கொண்டு யோகா பயிற்சி செய்யலாம். இதனால் உங்களது உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.

பொருட்களை புதைப்பது:

இந்த புது வருடத்தில் உங்களுக்கு பிடித்த பொருட்களையோ அல்லது கடிதங்களை எழுதியோ புதைத்து வைக்கலாம். இதற்கு, டைம் கேப்ஸ்யூல் என்று பெயர். அடுத்த வருடம் உங்களுக்காக நீங்கள் எழுதி வைக்கும் கடிதமாகவும் அது இருக்கலாம். இதனால், உங்களது புதிய வருடம் மகிழ்ச்சிகரமாக மாறும். 

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு முன் மிகப்பெரிய பரிசு.. இனி வெறும் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

படம் பார்ப்பது:

புத்தாண்டு தினத்தை மறக்கமுடியாததாக மற்றொரு வழி, இரவில் திரைப்படம் பார்ப்பது. இதை ஏற்பாடசெய்வதன் மூலம், நல்ல அனுபவங்களை உருவாக்கிக்கொள்ளலாம். இதில், உங்களுக்கு சிறுவயதில் பிடித்த படங்களை பார்க்க தேர்வு செய்யலாம். தனியாக பார்ப்பதை விட, குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ படம் பார்ப்பது போன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் விளையாடுவது:

புதிய தொடக்கத்தினை நமது அன்புக்குரியவர்களுடன் தொடங்குவது, இனிமையான தருணங்களை உருவாக்கும். குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம். இது, வாய் விட்டும் மனம் விட்டும் சிரிக்க உதவும். நண்பர்களுடன் விளையாடும் போதும் இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இதனால், உங்கள் புதிய ஆண்டு புதிய தொடக்கமாக இருக்கும்.

மேலும் படிக்க | 15 நாட்களில் தொப்பை கரைய இந்த 2 'மேஜிக்' பானத்தை குடித்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News