விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று அறைகூவும் நித்தியானந்தா....

வீடியோவில் அருள் பாலிக்கும் நித்தியானந்தாவின் புது அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் உபதேசம் செய்கிறார் நித்தியானந்தா....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 11:45 PM IST
விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று அறைகூவும் நித்தியானந்தா.... title=

புதுடெல்லி: அனைவருக்கும் அவ்வப்போது பொழுதுபோக்காக பல அறிவிப்புகளை அறிவுரையாக வீடியோவில் அருள் பாலிக்கும் நித்தியானந்தாவின் புது அறிவிப்பு என்ன தெரியுமா?விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்ற பயனுள்ள ஒன்றை உருவாக்கியிருப்பதாக தனது டிரேட் மார்க் சிரிப்புடன் உபதேசம் செய்கிறார் நித்தியானந்தா....

ஆன்மீக குரு என்றும் அறியப்பட்ட சுவாமி நித்தியானந்தா பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்தார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. நித்தியானந்தாவின் பீடத்திற்கு உலகம் முழுவதும் 50 நாடுகளில் கிளைகள் உண்டு. 

மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, பிறகு மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டார். இது மட்டுமல்ல, இதைப்போன்ற பல சர்ச்சைகளின் நாயகராக இருப்பவர் நித்தியானந்தா.செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதை அடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. அதனைத் தொடர்ந்து ஆசிரமம் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் முதல்வர், சதானந்த கவுடா ஆசிரமத்தை மூடுவதற்கு உத்திரவிட்டார்.

நித்தியானந்தாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது, அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார். நீதிமன்றம்,  ஜாமீன் வழங்கியது. அவர் ஜாமீனில் விடுதலையான சிறிது நேரத்தில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்த உள்மாநில பாதுகாப்பு போலீசார், நித்யானந்தரை மீண்டும் கைது செய்தனர். பிறகு ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டு, பிறகு வெளியேற்றப்பட்ட விவகாரம் என பல விவகாரங்களில் சிக்கியவர், சாமியார் என்று சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வந்தார் நித்தியனந்தா. இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.  இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக அவரை போலீஸ் தேடிவருகிறது. குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் என பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார். கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்ல, அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக வதந்திகள் உலா வந்தன. அந்த நாட்டிற்கு தனி மத்திய வங்கி, தனி கரன்சியும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நித்தியானந்தா.
அவ்வப்போது தன்னுடைய யூ-ட்யூபில் தோன்றி அவ்வப்போது தகவல்களை அள்ளித் தெளிக்கும் நித்தியானந்தா,வதந்திகள், வெறும் வதந்திகள் அல்ல, உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில்,தன் நாட்டிற்கு கைலாசா என்று பெயர் என்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். தன் நாட்டிற்கு தனி கரன்சி உருவாக்குவதாக அறிவித்து கலக்கிய நித்தியானந்தா, தற்போது விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியாவை உருவாக்கியிருப்பதாகவும், அதை பார்த்து தன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். 
ஆன்மீக குரு என ஒரு காலத்தில் பெயர் வாங்கிய நித்தியானந்தாவின் போதனைகள் பிரபலமானவை. இப்போதோ அதிரடி அறிக்கைகளை வீடியோ மூலம் அறிவித்து காமெடி குரு என்று பெயர் வாங்கிய நித்தியானந்தா, இப்போது நித்தியானந்தப்பீடியா என்று மார்தட்டி தன்னை எதிர்ப்பவர்கள் வேரோடு அழிவார்கள் என்று வசவு ஆசிகளை வழங்குகிறார்..

சரி... குரு அருளாசி வழங்கிவிட்டார் என்பதற்காக யாரும் உண்மையில் நித்தியானந்தபீடியா என்று கணினியில் தட்டச்சு செய்து விஷயங்களை தேட வேண்டாம்... விவகாரமாகிவிடப் போகிறது... ஜாக்கிரதை!!!

Read Also | NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம்

Trending News