Nude City: யாருமே ஆடை அணியாத விசித்திர ஊருக்கு போக வழி சொல்லுங்க ஜெண்டில்மேன்?

உலகில் ஒரேயொரு விசித்திரமான ஊரில் மக்கள் ஆடையணியாமல் அம்மணமாக நடமாடுகிறார்கள்.  இதுதான் அந்த நாட்டின் கலாச்சாரம். யாரும் ஆடைகளே அணியாத ஒரு ஊர் இந்த உலகில் இருக்கிறது, அதுவும் நகரம் என்றால் அதிர்ச்சியாய் இருக்கிறதா? இது கதையில்லை, மூடி மறைக்காத உண்மை! 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2021, 10:20 PM IST
  • தனித்துவமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது "நிர்வாண நகரம்"
  • சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் ஊர் இது
  • தேனிலவு வருவதற்கு ஏற்ற இடம் என்று பெயர் பெற்றது ஆடையே அணிய தேவையில்லாத இந்த ஊர்
Nude City: யாருமே ஆடை அணியாத விசித்திர ஊருக்கு போக வழி சொல்லுங்க ஜெண்டில்மேன்? title=

உலகம் விசித்திரமானது என்று தெரியும். ஒரு இடத்தில் சரி என்கிற விஷயம் மற்றொரு இடத்தில் தவறாக கருதப்படுவதும் இயல்புதான். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் சட்டங்களும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன.

ஆனால், உலகிற்கே இன்று பொதுவான விஷயமாக இருப்பது உடை உடுத்துவது. உடை உடுத்தும் பாணியில் மாற்றம் இருக்கலாம். எட்டு முழம் ஆடையாயும் இருக்கும், அரை மீட்டர் துணியிலே உடலை அடக்கும் ஸ்டைலான உடையும் இருக்கும். ஆனால் ஆடை அணிவது என்பது தான் இயல்பான விஷயம்.

உலகில் ஒரேயொரு விசித்திரமான ஊரில் மக்கள் ஆடையணியாமல் அம்மணமாக நடமாடுகிறார்கள்.  இதுதான் அந்த நாட்டின் கலாச்சாரம். யாரும் ஆடைகளே அணியாத ஒரு ஊர் இந்த உலகில் இருக்கிறது, அதுவும் நகரம் என்றால் அதிர்ச்சியாய் இருக்கிறதா? இது கதையில்லை, மூடி மறைக்காத உண்மை! 

Also Read | Bizarre Custom: திருமணமான 3 நாட்களுக்கு மணமக்கள் கழிப்பறைக்குச் செல்ல முடியாது! 

இந்த ஊரில் மக்கள் ஷாப்பிங் செய்யவும் நிர்வாணமாக செல்வார்கள், பீச்சுக்கும் அம்மணமாக போவார்கள், உணவகங்களுக்கும் உடை உடுத்தாமல் செல்வார்கள். ஜிம்முக்கு போகவும் தனி ஆடை வாங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை!

மற்ற நாடுகளில் இருந்தும் இங்கு கோடையை கழிக்க சுற்றுலாப்பயணிகள் வந்து குவிகிறார்கள். இந்த ஊரில் உள்ள அழகான கடற்கரையை அனுபவிக்க தான் இங்கு வருகிறார்கள். 

இந்த நகரம் தனது தனித்துவமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. எனவே, இந்த நகரம் எப்போதும் சர்ச்சைகளின் ஊராகவே இருக்கிறது. இந்த ஊருக்கு  நிர்வாண நகரம் என்ற பெயரும் உண்டு.
 
பிரான்சில் உள்ள பிரெஞ்சு நகரமான கேப் டி ஆட்ஜ் (French city, Cap D'Adge) அதன் தனித்துவமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது "நிர்வாண நகரம்" என்றும் அழைக்கப்படும் இந்த ஊர் "nudtourism" என்ற சுற்றுலாவுக்காக மக்கள் வரும் உலகின் ஒரே நகரம். 

Also Read | ஆன்லைன் வகுப்பில் உடலுறவில் ஈடுபட்ட மாணவர் வீடியோ வைரல்! விளைவு என்ன? 

இங்கு நிர்வாண நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. சுற்றுலாப் பயணிகளும் துணி இல்லாமல் இந்த ஊரில் சுற்றலாம். ஒவ்வொரு ஆண்டும் கோடையில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் ஊரில் கோடை கால சுற்றுலா களை கட்டுகிறது.

தேனிலவு வருவதற்கு ஏற்ற இடம் என்று பெயர் பெற்றது கேப் டி ஆட்ஜ் (Cap D'Adge). மிகவும் பிரபலமான ஹனிமூன் இடமாக கேப் டி ஆட்ஜ் அறியப்படுகிறது, ஏனென்றால் துணி இல்லாமல் இங்கு சுற்றித் திரிவதற்கு சுதந்திரம் உள்ளது என்பதால் பல தம்பதிகள் தங்கள் தேனிலவுக்கு இங்கு வருகிறார்கள். இந்த நகரம் அதன் அழகிய கடற்கரைகளுக்கும் பிரபலமானது. இங்குள்ள கடல் கரையும் வித்தியாசமான அழகில் இருக்கும்.  

இந்த பிரான்சின் நகரத்தில் துணி இல்லாமல் சுற்றித் திரிவதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருந்தாலும், பொது இடங்களில் அல்லது மக்களுக்கு முன்னால் எங்கும் உங்கள் கூட்டாளருடன் நெருக்கமாக இருக்கலாம் என்று அர்த்தமல்ல. பொதுவெளியில் காதல் செய்தால் 12,860 டாலர் அபராதம் விதிக்கப்படலாம். 

இந்த நகரத்திற்கு வருவதற்கு சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஊரில் எந்த விதமான புகைப்படமும் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு தடையைத் தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத ஏகாந்தமான ஊர் கேப் டி ஆட்ஜ்.

Also Read | Bizarre Truth: 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News