ஒவ்வொரு வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு Paytm ஆல் இன் ஒன் POS

Paytm All In One POS: வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு Paytm ஆல் இன் ஒன் POS தொடர்பான தகவல்கள்...  

Written by - Shiva Murugesan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2022, 06:38 PM IST
  • வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம்
  • Paytmஇன் ஆல் இன் ஒன் POS
ஒவ்வொரு வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு Paytm ஆல் இன் ஒன் POS title=

Paytm All In One POS: நிதிப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையிலான பாயின்ட் ஆப் சேல் எனப்படும் POS இயந்திரம், எலெக்ட்ரானிக் டேட்டா கேப்சர் (EDC) என்ற செயல்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது. சில்லரை விற்பனைக்கடைகளில், கட்டணங்களை / பேமெண்ட்களை ஏற்றுக் கொள்ளும் ஒன் ஸ்டாப் செயல்பாடாக, ஆல் இன் ஒன் POS இயந்திரங்கள் விளங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள், தாங்கள் வைத்து உள்ள டெபிட் அட்டைகள், கிரெடிட் அட்டைகள், க்யூஆர் குறியீடுகள், யுபிஐ, Paytm பேமெண்ட் வங்கி முறைகள் அல்லது நெட்பேங்கிங் உதவியுடன் POS இயந்திரங்களில் தங்களது கட்டணங்களை செலுத்திக் கொள்ள இயலும். POS இயந்திரங்கள், விசா, மாஸ்டர் ரூபே நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மட்டுமல்லாது, சர்வதேச நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு வகையான வர்த்தகர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள்

எண்ணற்ற வகையில் வாடிக்கையாளர்களிடமி்ருந்து கட்டணங்களை பெற்று பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில், Paytm பிசினஸ் நிர்வாகம், வணிகர்களுக்கு ஆல் இன் ஒன் POS மெஷின்களை வழங்குகிறது. நீங்கள் சில்லரை விற்பனைக் கடை நடத்தினாலும் சரி, உணவகம் அல்லது பொழுதுபோக்கு வணிகம் மேற்கொள்பவராக இருந்தாலும் சரி, உங்களின் வர்த்தகம் சிறக்க, Paytm நிறுவனம், அற்புதமான அம்சங்களை வழங்குகிறது. அது என்ன என்று அறிய ஆர்வம் மேலோங்குதா? வாருங்கள் அவைகளை ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்....

மேலும் படிக்க | அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!

பல்வேறு வகையான கட்டண ஆதாரங்கள்

நீங்கள் Paytm ஆல் இன் ஒன் POS மெஷின் வைத்து இருந்தால், உங்களது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் ஆதாரங்கள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கு அவர்கள் தங்களது பணத்தை, 7 கட்டண முறைகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், Paytm, வேலட், டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள், நெட் பேங்கிங், யுபிஐ மற்றும் இஎம்ஐ (EMI) உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், தங்களது கட்டணங்களை செலுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நிதி விவகாரத்தில் உடனடி தீர்வு

நீங்கள் சொந்தமாக வணிகம் செய்பவராக இருந்தால், இனி, தொகுதி அடிப்படையிலான நிதித் தீர்வுகளுக்கு இனி டாட்டா காட்டிவிடலாம். Paytm ஆல் இன் ஒன் POS, உங்கள் பணம் உடனடியாக வந்து சேர்வதை உறுதி செய்கிறது. இந்த கலெக்சன்கள், உடனடியாக உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன. இதன்மூலம், உங்களது வணிகத்திற்கான நிதித்தேவைகள், Paytm மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.

EMI விருப்பங்கள்

ஒவ்வொரு வணிகமும், அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதிலும், அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவர்வதிலுமே, அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இதில் அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல் யாதெனில், வாடிக்கையாளர்களின் வசதிக்குறைபாடே ஆகும். இருந்தபோதிலும், இந்த சிக்கல், தற்போது மாதாந்திர அடிப்படையில் தவணையை செலுத்தும் (EMI) திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆல் இன் ஒன் POS, தங்களது வாடிக்கையாளர்களை, ‘Brand EMI’ மற்றும் ‘Bank EMI’ உடன் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை முறையில் தங்களுக்கு உகந்த நேரத்தில் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | 'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு - குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

இவைகளின் மூலம், பிராண்ட் மற்றும் வங்கி பார்ட்னர்களுக்கு இடையே, ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்குகின்றன. இந்த வழிமுறையின் மூலம், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Paytm நிறுவனம், பிரமிப்பூட்டும் வகையிலான கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன.

எளிதான பில்லிங் முறை / ஸ்கேன், பணம் செலுத்துதல் Paytm நிறுவனத்தின் ஆல் இன் ஒன் POS மெஷின் உடன் இணைந்து உள்ள பிரின்டர் மற்றும் ஸ்கேனர் மூலம், எளிதாக பில்லிங் செய்ய, உடனே ஒரு ஹலோ சொல்லுங்கள். பணம் செலுத்த எதையும் எழுதத் தேவையில்லை, எதையும் டைப் செய்ய தேவையில்லை மற்றும் எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. வெறும் ஸ்கேன் மட்டும் செய்து பணத்தை செலுத்தி, கட்டணம் செலுத்தும் வேலையை எளிதாக முடித்துவிடலாம். இந்த முறையில் பணம் செலுத்துவதன் மூலம், உங்களுக்கும் மற்றும் உங்களது வாடிக்கையாளர்களுக்கு காகித ரசீது மற்றும் டிஜிட்டல் ரசீதுகள் கிடைக்கும்.

இது மேலும் மூன்றாம் தரப்பு பில்லிங் தீர்வுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம், பொருட்களை வாங்குபவர்களுக்கும் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு உடனடியாக இன்வாய்ஸ் கிடைக்க
வழிவகை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வணிகரீதியிலான நன்மைகள்

நீங்கள் Paytm ஆல் இன் ஒன் POS பயனாளராக ஆகிவிட்டால், உங்களது வர்த்தகத்திற்கு உதவும் வகையில், ஒற்றை சாளர உடன்படிக்கை, பணப்புழக்க நிர்வாகம், கடனுதவிகள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை

Paytm அதன் பயனாளர்கள் உடன் வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான உ.றவுகளை உருவாக்குவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. லாயல்டி திட்டங்கள், வாடிக்கையாளர் சந்தைப்படுத்துதல் திட்டங்கள், வெகுமதி அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கும் Paytm பயனாளர்கள், அதன் ஆல் இன் ஒன் POS மெஷினை பயன்படுத்தலாம். பணப்பரிவர்த்தனை நிகழ்வின்போது, ஏதேனும் சிரமங்கள் ஏற்படும்பட்சத்தில், உங்களுக்கு உதவ நன்கு பயிற்சி பெற்ற வாடிக்கையாளர் உதவி மைய சேவையையும், Paytm வழங்குகிறது.

மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன

மேலும் படிக்க | தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News