அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் உள்ளதா? ₹10 லட்சம் வரை அள்ளலாம்!

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2022, 11:09 AM IST
  • அன்னை வைஷ்ணவ தேவி நாணயம் மிகவும் அதிர்ஷ்ட நாணயமாக கருதப்படுகிறது.
  • சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.
  • நாணயத்தில் மாதா வைஷ்ணோ தேவியின் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் உள்ளதா? ₹10 லட்சம் வரை அள்ளலாம்!  title=

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியட்டது. 

அரிய நாணயங்களுக்கு சந்தையில் எப்போதுமே மதிப்பு உண்டு. சில சமயங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பெற மக்கள் தயாராக உள்ளனர்.  அந்த வகையில், 5 மற்றும் 10 ரூபாய் கொண்ட  வைஷ்ணவ தேவியின் உருவப்படம் கொண்ட சிறப்பு நாணயங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சிறப்பு நாணயங்களில் வைஷ்ணோ தேவியின் படம் உள்ளதால், அவை மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் நாணயங்கள் என்ர நம்பிக்கையின் காரணமாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்து, அத்தகைய நாணயத்தை வாங்க மக்கள் தயாராக உள்ளனர். இந்து மதத்தில், அன்னை வைஷ்ணவ தேவிக்கு முக்கிய இடம் உள்ளது. ஜம்முவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவிலில் அன்னையை தரிசனம் செய்வதற்காக ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல கிலோமீட்டர்கள் மலையேறி செல்கின்றனர்.

 மேலும் படிக்க | Zero Rupee Note: பூஜ்ஜிய ரூபாய் நோட்டு எதற்காக அச்சடிக்கப்பட்டது; சுவாரஸ்ய தகவல்!

சிறப்பு நாணயங்கள், பழைய நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. இதற்காக, நாணயத்தின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதன் பிறகு நாணயங்களுக்கான ஏலம் பெறப்படும். பேரம் பேசி அதிகபட்ச விலைக்கு நாணயத்தை விற்கலாம். மாதா வைஷ்ணவ தேவியின் இந்த நாணயங்கள் இதுவரை ஏலம் விட்டதில்,  அதிக அளவாக 10 லட்ச ரூபாய்கிடைத்துள்ளது. நாணயங்களை விற்க கீழே குறிப்பிட்டுள்ள இந்த இணையதளங்களின் உதவியை நீங்கள் பெறலாம்.

https://dir.indiamart.com/impcat/old-coins.html
https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
http://www.indiancurrencies.com/

 மேலும் படிக்க | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News