மீண்டும் வரும் 1000 ரூபாய் நோட்டுகள்? வெளியான முக்கிய தகவல்!

1000 Rupees Note: அக்டோபர் 8-ம் தேதி முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2023, 08:27 AM IST
  • ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு.
  • ரூ.2000 நோட்டுகளில் 87 சதவீதம் திரும்பி வந்துவிட்து.
  • ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றி கொள்ளலாம்.
மீண்டும் வரும் 1000 ரூபாய் நோட்டுகள்? வெளியான முக்கிய தகவல்! title=

1000 Rupees Note: கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என வந்தந்திகள் எழுந்தன.  இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வமாக ரூ 1000 நோட்டு வாபஸ் தொடர்பான வதந்திகளை ரத்து செய்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன, இன்னும் ரூ.10 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது.  1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆர்பிஐ உறுதிபடுத்தி உள்ளது. ANIன் ட்வீட்டில், RBI தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கான நோக்கங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.  போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, சாத்தியமான பண இருப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்தது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சியானது, பணத்திற்கான தேவை குறைவதற்கும் பங்களித்துள்ளது.

மேலும் படிக்க |  போஸ்ட் ஆபீஸ் RD... HDFC RD... எஸ்பிஐ RD... எது பெஸ்ட்..!!

ஆதாரமற்ற வதந்திகளை நம்புவதற்கு எதிராக பொதுமக்களை ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது மற்றும் நிலையான நாணய முறையை பராமரிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. 2016 பணமதிப்பிழப்பில், பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் உருவானது. மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. மேலும் அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ முதலில் கேட்கப்பட்டது. கடைசி தேதி அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. 

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்குமான காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து, அவற்றின் புழக்கம் முடிவுக்கு வந்துள்ளது.  வங்கிகள் இனி ரூ.2000 நோட்டுகளை ஏற்கவில்லை என்றாலும், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ தனிநபர்களுக்கு அனுமதி உள்ளது.  ரிசர்வ் வங்கி தகவலின்படி, 500, 1000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் முதன்முதலில் ஜனவரி 1946ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 ஆம் ஆண்டும், 1978 ஆம் ஆண்டிலும் மீண்டும் பணமதிப்பு செய்யப்பட்டன. பின்பு நவம்பர் 8, 2016ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன.  

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்குவோருக்கு கொண்டாட்டம்: பண்டிகை காலத்தில் அசத்தும் அரசின் மானிய திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News