புதுடெல்லி: ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும்.
அதேபோல சனியின் வீட்டில் சந்திரனோ அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ அது புணர்ப்பு தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில் சந்திரன் மிகவும் வேகமாக செயல்படுபவர். அவர் ராசி மண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார் என்றால், மிகவும் மந்தமாக செயல்படும் சனியோ 30 ஆண்டுகளில் ராசி மண்டலத்தை சுற்றுவார்.
இப்படி அதி வேகமும், அதி மந்தமுமான இரு கிரகங்களின் இணைவால் ஏற்படும் தோஷம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அபாய காலம், இவற்றை செய்தால் நிவாரணம் பெறலாம்
சனி தோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்திற்கு பல தடைகள் வரும். அவற்றை மீறியே கல்யாணம் நடத்தமுடியும். சனியின் தோஷத்தால் கடுமையாக உழைக்க வேண்டிய அவர்கள், எப்போதும் வேலை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பர்கள்.
இது ஒரு விதத்தில் அவர்களுக்கு வாழ்க்கையில் பின்னடைவைக் கொடுக்கும். குடும்பத்தில் பிறரிடம் ஒட்டாத தன்மையைக் கொடுக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்று பூஜை செய்து அன்னதானம் வழங்க வேண்டும்,
காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது உஷாராக இருக்க வேண்டும்
சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபமிட்டு,ம்சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்வது நல்லது.
அதேபோல அன்னதானம் செய்வதும் நன்று. ஒரு முறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட்டு வந்தால் சனி தோஷம் தீர்க்கும்.
சனி பகவானுக்கு மட்டும் தான் ஈஸ்வர பட்டம் உண்டு. அதாவது சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்ற சனிபகவானை சாந்தி செய்ய, ஈஸ்வரரை வணங்கினால் போதும்.
மேலும் படிக்க | ராகு கிரகம் கண்டு அஞ்ச வேண்டாம்
அதிலும் சனி தோஷம் விலக, சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
பிரதோஷ வழிபாடு செய்வது, சிவ புராணம், பஞ்சாட்சரம்போன்றவற்றை பாராயணம் செய்தால் சனி தோஷம் நீங்கும்.
சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரை நாட்டு சனியின் தோஷத்தைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Akshaya Tritiya 2022: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR