Akasa Air வழங்கும் அசத்தல் ஆஃபர்... குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள்!

Akasa Air Year End Sale: ஆகாசா ஏர் நிறுவனம் இயர் எண்ட் சேல் என்னும் சலுகை விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. குறைந்த பணத்தில் பல இடங்களுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2022, 06:38 PM IST
  • ஆகாசா ஏர் நிறுவனம் இயர் எண்ட் சேல் என்னும் சலுகை விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது.
  • ஆகாசா ஏர் ட்வீட் செய்த தகவல்.
  • சென்னை, புனே, லக்னோ, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
Akasa Air வழங்கும் அசத்தல் ஆஃபர்... குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள்! title=

Akasa Air Year End Sale: புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. நீங்களும் கிறிஸ்துமஸ் (கிறிஸ்துமஸ் 2022) அல்லது புத்தாண்டு (புத்தாண்டு 2023) அன்று எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. உண்மையில், ஆகாசா ஏர் அத்தகையவர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது. புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர் புத்தாண்டில் பயணிப்பவர்களுக்கு பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. ஆகாசா ஏர்  நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனை பற்றிய முழு விவரங்கள்

ஆகாசா ஏர் நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையின் பெயர் இயர் எண்ட் சேல். இதன்படி, 11 நகரங்களின் விமான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதாவது குறைந்த பணத்தில் பல இடங்களுக்கு விமானத்தில் பயணம் செய்யலாம். ஃப்ளைட் புக்கிங்கில் 10% பெரிய தள்ளுபடியை நீங்கள் விரும்பினால், 12 டிசம்பர் 2022க்குள் விமானத்தை முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க |  இந்த 5 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்

ஆகாசா ஏர் ட்வீட் செய்த தகவல்

ஆகாசா ஏர் இந்த சிறப்பு சலுகை (Special Offers on Akasa Air) பற்றி உங்களுக்கான சிறந்த ஆஃபர் என்று தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி விற்பனையின் மூலம், 450க்கும் மேற்பட்ட விமானங்களில் 10% வரை தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் இந்த தள்ளுபடி  சலுகை 11 நகரங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 12 டிசம்பர் 2022 வரை இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நகரங்களுக்கான விமானங்களில் தள்ளுபடி

ஆகாசா ஏர் சேவையில் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி கிடைக்கும் . இதன் கீழ் 11 நகரங்களில் 450 விமானங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் கீழ் அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, சென்னை, புனே, லக்னோ, கவுகாத்தி, விசாகப்பட்டினம், அகர்தலா, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News