ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு

ஆலயம் செல்வது சாலவும் நன்று என்பது முதுமொழி. ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடும்போது கிடைக்கும் நிம்மதி அவரவர் நேரடியாக அனுபவிக்கும் அனுபவம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2021, 04:48 PM IST
  • நம்மாழ்வார் மூலம் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு
  • பெருமாள் ஒரு பக்தனுக்கு கொடுக்கும் அங்கீகாரம்
  • 12 ஆழ்வார்களின் ஒருவர் நம்மாழ்வார்
ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு title=

ஆலயம் செல்வது சாலவும் நன்று என்பது முதுமொழி. ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடும்போது கிடைக்கும் நிம்மதி அவரவர் நேரடியாக அனுபவிக்கும் அனுபவம்.

கோவிலுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், ஆலயத்தில் தெய்வத்தை தொழுத பின் கோவில் வழக்கப்படி செய்யும் சில வழக்கங்கள் என்றும் மாறாதது. அவற்றில் ஒன்று, பெருமாள்  கோவில்களில் இறையை வணங்கிய பிறகு, பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து தலையில் சடாரியை வைத்து ஆசி நல்குவதும் ஆகும்.  

ஸ்ரீசடாரி என்பது விஷ்ணுவை வணங்கித் துதித்த பன்னிரு ஆழ்வார்களின் ஒருவரான நம்மாழ்வார் என்பது ஐதீகம்.வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். அவர் நான்கு வேதங்களையும் செந்தமிழில் பாடி, ’வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று புகழப்படுகிறார். 

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தவுடன் அழவில்லை. இயற்கைக்கு மாறாக இருந்த அந்தக்குழந்தைக்கு மாறன் என்று பெயரிட்டனர்.

Also Read | 

விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார், சடகோபன் என்றும் அழைக்கப்படுகிறார். பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்ற அவர் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்ததால் திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு. 

எனவே, பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது. சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.

சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது நம் மனதில் பேரானந்தம் ஏற்படுகிறது. சடாரி வைக்கும் பொழுது தலை குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

Also Read | இன்றைய ராசிபலன், 16 மே 2021: விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News