Horoscope 2022: புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களின் படிப்பு, வேலை வாய்ப்பில் ஏற்றமோ ஏற்றம்

புத்தாண்டு பிறக்கவுள்ளது. வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் அனைத்து வளங்களையும், அரோக்கியத்தையும் அளிக்கும் என்று அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

Last Updated : Dec 9, 2021, 05:15 PM IST
  • ரிஷப ராசி மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும்.
  • சிம்ம ராசி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
  • நீண்ட நாட்களாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவுள்ள மாணவர்களுக்கு புத்தாண்டில் இந்த கனவு நிஜமாகும்.
Horoscope 2022: புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களின் படிப்பு, வேலை வாய்ப்பில் ஏற்றமோ ஏற்றம்  title=

2022 Horoscope: காலம் பொன் போன்றது. இதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், வேலைக்கான நேர்காணல்களுக்கு செல்பவர்களுக்கும் நேரத்தின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாக உள்ளது. ஏனெனில் இவர்களின் வாழ்க்கையின் அடித்தளம் இந்த தேர்வுகள் மற்றுன் நேர்காணல்களை சார்ந்துள்ளது.

புத்தாண்டு பிறக்கவுள்ளது. வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் அனைத்து வளங்களையும், அரோக்கியத்தையும் அளிக்கும் என்று அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

வரவிருக்கும் புத்தாண்டு, படிக்கும் மாணவர்களுக்கு எப்படி இருக்கும்? எந்த ராசிக்காரர்கள் (Zodiac Signs) படிப்பில் சாதனை செய்வார்கள்? இப்பைட்ட பல கேள்விகள் மாணவர்களின் மனதில் இருக்கும். 

ஜோதிட கணக்கீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு கல்வி, படிப்பு, தேர்வுகள், நேர்காணல் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை என இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அட்டகாசமாய் உள்ளது:

ரிஷபம்: ரிஷப ராசி மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். உயர்கல்வி பற்றி இவர்கள் கண்ட கனவு நனவாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் இந்த ஆண்டு வெற்றி பெறுவார்கள்.

ALSO READ | Marriages in 2022: புத்தாண்டில் திருமணத்திற்கான சுப முகூர்த்தங்கள்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் கல்வி, எழுத்துப்பணி ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக நடக்கும். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரு பெரிய கல்லூரியில் சேர்க்கை கிடைக்கக்கூடும். வேலைக்காக காத்திருப்பவர்கள் நேர்காணலில் வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்: சிம்ம (Leo) ராசி மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும். ஆனால் பள்ளி மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டும், அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.

கன்னி: கன்னி (Virgo) ராசி மாணவர்கள் இந்த ஆண்டு தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். ஆனால் இதற்காக அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் கனவு நிறைவேறும்.

துலாம்: துலாம் ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டும் சிறப்பான வெற்றியைத் தரும். இந்த ஆண்டு உங்கள் தொழில் வாழ்க்கைக்கு ஒரு மைல்கல்லாக அமையும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். 

தனுசு: இந்த ஆண்டு போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. நிறுத்தாமல் கடினமாக உழைக்க வேண்டும். மீதமுள்ள மாணவர்களும் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

மீனம்: நீண்ட நாட்களாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவுள்ள இந்த ராசி மாணவர்களுக்கு புத்தாண்டில் இந்த கனவு நிஜமாகும். இவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவார்கள். போட்டித் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Horoscope 2022: புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வேற லெவல் வாழ்க்கை தொடங்கப்போகுது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News