திருப்பூரில் சாய ஆலையில் ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ், என்ற 3 பேர் சாய ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சத்தம் போட்டிருக்கிறார். நிறுவனத்தின் மேலாளர் தினேஷ், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் இருவரும் காப்பாற்ற சென்றுள்ளனர்.
ALSO READ | கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்
இதில் விஷவாயு அதிகமாக தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்ற சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர். நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர். #Thirupur #DyeingFactory #GasTragedy #TamilNadu #ZeeNews Tamil pic.twitter.com/wFHR5ZteH1
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) November 15, 2021
இதனிடையே போலீசார் சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருந்த நிலையில் உயிரை பணயம் வைத்து தொட்டிக்குள் இறங்கி 3 பேரை தீயணைப்பு வீரர் பாண்டீஸ் வரன் காப்பாற்றினார். இந்நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராஜ் மற்றும் ராமகிருஷ்ணனுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ | வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR