காதலர் தினத்தில் எப்படி புரபோசஸ் செய்யலாம்? உங்களுக்கான சில ஐடியாகள்!

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் சேர்த்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை உருவாக்கி அவர்களுக்கு ப்ரொபோஸ் செய்து அவர்களின் உணர்ச்சியை ரசிக்கலாம்.    

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2023, 02:48 PM IST
  • பூங்கொத்து அல்லது மோதிரத்தை வைத்துக்கொண்டு உங்கள் காதலிக்கு ப்ரொபோஸ் செய்யலாம்.
  • குடும்ப நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் உங்களுக்கு பிடித்தவருக்கு ப்ரொபோஸ் செய்யலாம்.
  • உங்கள் துணைக்கு பிடித்த உணவு அல்லது பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
காதலர் தினத்தில் எப்படி புரபோசஸ் செய்யலாம்? உங்களுக்கான சில ஐடியாகள்! title=

எவ்வளவு தான் நாம் ஒருவர் மீது தீராத காதல் கொண்டிருந்தாலும் அந்த காதலை வெளிப்படுத்தினால் அவர்களோடு நாம் இணைய முடியும்.  பலரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தயக்கம் காட்டுகின்றனர், அதற்கு காரணம் நாம் விரும்புபவர் காதலை ஏற்பாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் தான்.  காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினால் உங்கள் துணையை இம்ப்ரஸ் செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.  நீங்கள் ஒரு பொது இடத்தில் ஒரு பூங்கொத்து மற்றும் கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு உங்கள் காதலிக்கு ப்ரொபோஸ் செய்யலாம்.  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் சேர்த்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை உருவாக்கி அவர்களுக்கு ப்ரொபோஸ் செய்து அவர்களின் உணர்ச்சியை ரசிக்கலாம்.  அனைவரது முன்னிலையிலும் நீங்கள் உங்கள் துணைக்கு ப்ரொபோஸ் செய்ய விரும்பவில்லை ஒரு தனியான இடத்தில் அவர்களிடம் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.  

மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க

மேலும் நீங்கள் காதலிப்பவரை வாக்கிங் செல்லும் போதோ அல்லது வீட்டில் ஒன்றாக திரைப்படம் பார்க்கும்போதோ அவர்களிடம் காதலை வெளிப்படுத்தி நீங்கள் ஆச்சரியப்படுத்தலாம்.  நீங்கள் விரும்பும் நபருடன் சிறிது காலமாக டேட்டிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால் அவர்கள் உங்களை எந்த அளவுக்கு மகிழ்விக்கிறார்கள் என்பதை பற்றி பேச ஆரம்பித்து உங்கள் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்தலாம்.  நீங்கள் விரும்பும் நபருக்கு எந்த வகையான உணவு பிடிக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்யலாம் அல்லது அவர்களை அசத்தும் வகையில் ஏதேனும் சிறப்புப் பரிசையும் வழங்கி காதலை வெளிப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம்.  இதுவரை உங்களுக்கு பிடித்தவருக்கு நீங்கள் ப்ரொபோஸ் செய்யவில்லை என்றாலோ அல்லது ப்ரொபோஸ் செய்ய தயங்கி கொண்டிருக்கிறீர்கள் என்றாலோ அவர்களுக்கு இந்த காதலர் தின வாரத்தில் நீங்கள் உங்கள் காதலை தெரிவிக்கலாம்.

இருப்பினும் உங்களுக்கு பிடித்தவரிடம் உங்கள் காதலை தெரிவிக்க நீங்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்பதை பற்றி நீங்கள் சிந்திக்காமல் உங்கள் மனதிலுள்ள காதலை தைரியமாக வெளிப்படுத்துங்கள்.  நீங்கள் ப்ரொபோஸ் செய்யும்போது உங்களுக்கு பிடித்தவரை கவரும் வகையில் பிரத்யேகமான பரிசு, சாக்லேட் மற்றும் ரோஜா ஆகியவற்றைக் கொடுக்கலாம்.  காதலிப்பவர்கள் மட்டும் தான் காதலர் திங் வாரத்தை கொண்டாட வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் இல்லை, திருமணமான தம்பதிகளும் அவர்களது துணையிடம் காதலை வெளிப்படுத்தலாம்.  

ஒரே மாதிரியான இரண்டு மோதிரங்களை வாங்கி இருவரும் அணிவித்து தங்களது காதலை வெளிப்படுத்தலாம்.  அதுவே எளிமையாக கொண்டாட விரும்பினால், அவர்களுக்குப் பிடித்தமான உணவை அவர்களுக்குச் செய்து, அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை பகிரலாம்.  இந்த நாட்களில் உங்கள் துணையை நீங்கள் முதலில் எங்கு சந்தித்தீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று அழகான பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம்.

மேலும் படிக்க | Teddy day: காதலர் வாரத்தில் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் ‘டெடி டே’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News