குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க... இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்!

தனிநபர் கடன் வட்டி விகிதங்கள்: பல பெரிய வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு 9 முதல் 11 சதவீதம் வரை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2023, 05:04 PM IST
  • பல பெரிய வங்கிகள் தனிநபர் கடனுக்கு 9-11% வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 9.30 முதல் 13.40% வட்டியின் கடன் வழங்குகிறது.
  • SBI தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 11-14% என்ற அளவில் உள்ளது.
குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க...  இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்! title=

பணத்தேவை என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். யாருக்கும் திடீரென்று பணம் தேவைப்படலாம். நம்மிடம் பணம் இல்லாத போது முதலில் வரும் யோசனை தனிநபர் கடன் வாங்குவது. ஆனால் தனிநபர் கடன் என்பது வட்டி அதிகம் உள்ள கடன். அத்தகைய சூழ்நிலையில், வேறு நல்ல வழி இல்லாதபோது, ​​ஒருவர் தனிநபர் கடனை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்று பயன்படுத்துவதற்கான ஒரு வழியாகும். தனிநபர் கடனை எடுப்பதற்கு முன், இந்த கடனை சரியான நோக்கத்திற்காக எடுக்கிறோமா இல்லையா என்பதை முதலில் நாம் நமக்குள் சிந்தித்து பார்க்க வேண்டும். சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தனிநபர் கடன் வாங்குகிறார்கள். இது கிட்டத்தட்ட தேவையில்லாதது. மறுபுறம், நீங்கள் வாகனம் வாங்க விரும்பினால், தனிநபர் கடன் வாங்க வேண்டாம், ஆனால் வாகனக் கடன் வாங்கவும்.

சிபில் ஸ்கோரை சிறப்பாக வைத்திருங்கள்

எந்தவொரு கடனையும் கொடுக்கும்போது, ​​கடன் வழங்குபவர் முதலில் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோரை சரிபார்க்கிறார். வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், சிறந்த கடன் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்களின் கடந்தகால கடனை திருப்பிச் செலுத்தும் செயல்திறனை பிரதிபலிக்கிறது. உங்களிடம் நல்ல வகையில் பணத்தை திருப்பிய செலுத்திய கடன் வரலாறு இருந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோரும் நன்றாக இருக்கும். தனிநபர் கடனுக்கு 750 கிரெடிட் ஸ்கோர் போதுமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் இதை விட அதிகமாக இருந்தால், தனிநபர் கடனுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறலாம்.

கடன் தொகை ரூ. 1 லட்சமாகவும், திருப்பிச்செலுத்தும் காலம் 5 ஆண்டுகளாகவும் இருந்தால், நாட்டின் முக்கிய வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு பின்வரும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன:

மேலும் படிக்க | தினமும் ரூ. 100 தனியாக சேமியுங்கள்... அதில் உங்களுக்கு பிடித்த காரையே வாங்கலாம்! - அது எப்படி?

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி விகிதம்  9.30-13.40 0.50% வரை 

செயலாக்க கட்டணம் (குறைந்தபட்சம் ரூ. 500)+பெண்கள் தொழில் வல்லுநர்களுக்கு GST கட்டணம் இல்லை

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 

வட்டி விகிதம் - 10 -12.80 % வரை 

செயலாக்க கட்டணம் - 1%+GST

இந்தியன் வங்கி 

வட்டி விகிதம் - 10-11.40 % வரை 

செயலாக்க கட்டணம் 1% (அதிகபட்சம் ரூ. 10,000)

பேங்க் ஆஃப் இந்தியா 

வட்டி விகிதம் - 10.25-14.75 % வரை 

செயலாக்க கட்டணம் - 2% (குறைந்தபட்சம் 1000 & அதிகபட்சம் 10,000)

ஆக்சிஸ் வங்கி

வட்டி விகிதம் -  10.49-22 % வரை 

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 

வட்டி விகிதம் - 10.49-24 % வரை 

செயலாக்க கட்டணம் 6,999 மற்றும் 3.5 சதவீதம் வரை

HDFC வங்கி 

வட்டி விகிதம் - 10.50-24 % வரை 

செயலாக்க கட்டணம் ரூ 4,999 வரை

ICICI வங்கி 

வட்டி விகிதம் - 10.50-16 % வரை 

செயலாக்க கட்டணம் 2.5%+GST

கனரா வங்கி

வட்டி விகிதம் - 10.65-16.25 % வரை 

செயலாக்க கட்டணம் - கட்டணம் இல்லை

பேங்க் ஆஃப் பரோடா

வட்டி விகிதம் -  10.90-18.25 % வரை 

செயலாக்க கட்டணம் 1% முதல் 2% (குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 10,000)+ஜிஎஸ்டி

கோடக் மஹிந்திரா வங்கி 

வட்டி விகிதம் - 10.99-24 % வரை 

செயலாக்க கட்டணம் - 2.50%+GST

பாரத ஸ்டேட் வங்கி

வட்டி விகிதம் - 11-14 % வரை 

செயலாக்க கட்டணம் 1.50% (குறைந்தபட்சம் ரூ 1000 & அதிகபட்சம் ரூ 15,000)+ ஜிஎஸ்டி

நிறுவனத்தின் வகையைப் பொறுத்து கடன் தகுதி

தனிநபர் கடன் வட்டி விகிதம் நீங்கள் இருக்கும் வேலை வகை மற்றும் நீங்கள் இருக்கும் நிறுவனத்தின் வகையைப் பொறுத்தது. உங்கள் நிறுவனம் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கிறதா இல்லையா என்பதை இங்கே கடன் வழங்குபவர் பார்க்கிறார். நிதி ரீதியாக நலிவடைந்த நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஒழுங்கற்ற சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் பணியாளர்கள் கடன் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அத்தகையவர்கள் ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகிதத்தில் கடன் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | லட்சங்களை அள்ளித்த தரும் அரிய ‘5’ ரூபாய் நோட்டு... உங்ககிட்ட இருக்கா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News