கனவுகளில் பாம்புகள் வருகிறதா; அதன் பலன்கள் என்ன; முழு விபரம்..!!

தூங்கும் போது மக்கள் பெரும்பாலும் பல்வேறு வகையான கனவுகளைக் காண்கிறார்கள். இவற்றில் சில  உற்சாகம் தருபவையாகவும், சில பயமுறுத்தவதாகவும், சில வருத்தப்படும் வகையிலும் இருக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 19, 2021, 03:58 PM IST
  • பல நேரங்களில் பாம்புகள் கனவில் சண்டையிடுவதையோ அல்லது கீரியும் பாம்பும் சண்டையிடுவதையோ பார்க்கிறோம்.
  • இந்த வகை பாம்பைப் பார்த்தால், விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரலாம்.
  • சில நேரங்களில் உங்கள் கனவில் பாம்பு உங்களைக் கடிக்கலாம்.
கனவுகளில் பாம்புகள் வருகிறதா; அதன் பலன்கள் என்ன; முழு விபரம்..!! title=

Snakes in Dreams: தூங்கும் போது மக்கள் பெரும்பாலும் பல்வேறு வகையான கனவுகளைக் காண்கிறார்கள். இவற்றில் சில  உற்சாகம் தருபவையாகவும், சில பயமுறுத்தவதாகவும், சில வருத்தப்படும் வகையிலும் இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் உள்ள பலன்கள் அறிந்து கொள்ளலாம். 

சண்டையிடும் பாம்புகள்  கண்டால் உண்டாகும் பலன்கள்

பல நேரங்களில் பாம்புகள் கனவில் சண்டையிடுவதையோ அல்லது கீரியும் பாம்பும் சண்டையிடுவதையோ பார்க்கிறோம்.  அப்படியானால், நீங்கள் நீதிமன்ற வழக்கு -நீதிமன்ற விவகாரத்தில் சிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் கனவில் வெள்ளை நிற பாம்பு தோன்றும். இந்த வகை பாம்பைப் பார்த்தால்,  விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரலாம் என அர்த்தம்.  மேலும் பண வரவையும் இது குறிக்கிறது

கனவில் பாம்பு  கடித்தால் ஏற்படும் பலன்கள்

சில நேரங்களில் உங்கள் கனவில்  பாம்பு உங்களைக் கடிக்கலாம். அத்தகைய கனவில் பலனில் கூறப்பட்டுள்ளது என்ன்வென்றால், நீங்கள் விரைவில் சில தீவிர நோய்களால் பாதிக்கப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறி அது என கூறப்படுகிறது. மறுபுறம், உங்கள் கனவில் பாம்பின் பற்களைக் கண்டால், உங்கள் நெருங்கிய அல்லது நலம் விரும்பிகள்  உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ | Money Plant: உங்களின் பணம் காய்க்கும் மரமாக இருக்க சில டிப்ஸ்..!!!

கனவில் பாம்பு துரத்துதல்

கனவில் பாம்பு உங்களைத் துரத்துவதைப் பார்க்கிறீர்கள் என்றால்,  இதன் பொருள் நீங்கள் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள், அல்லது எதையாவது மறைக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் கனவில் ஒரு பாம்பு கொல்லப்படுவதையோ அல்லது இறந்த பாம்பை பார்த்தாலோ, உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பதற்கான அறிகுறியாகும்.

கனவில் பறக்கும் பாம்புகளைப் பார்ப்பதன் பலன் 

இரவில் தூங்கும் போது சிலர் பறக்கும் பாம்பை பார்க்கக் கூடும். அதன் பலன் உங்கள் வாழ்க்கையில் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை இது காட்டுகிறது. மறுபுறம், பல பாம்புகளால் சூழப்பட்டிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக வெளியே வருவதைப் போல் கனவில் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.

ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது

கனவுகளில் பாம்புகளை அடிக்கடி பார்ப்பதன் பலன்

உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் காணப்பட்டால், அது கால் சர்ப் தோஷத்தின் அறிகுறி என கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஜாதகத்தில் இந்த வகை கால் சர்ப்ப தோஷம் இருந்தால், அதன் பரிகாரத்திற்காக நாம் உடனடியாக ஒரு சிறந்த ஜோதிடரைத் தொடர்பு கொள்ள வேண்டும். மந்திரங்கள் மூலம் பரிகாரங்களை  செய்வதன் மூலம் இந்த குறைபாடு நீக்கப்படும்.

(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Vastu Tips: வீட்டிலும் அலுவலகத்திலும் கம்ப்யூட்டரை இந்த திசையில் வைத்தால் வெற்றிகள் குவியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News