சபரிமலையில் வழிபட பெண்களுக்கும் அனுமதி உண்டு -SC

ஆண்களைப்போல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Jul 18, 2018, 03:43 PM IST
சபரிமலையில் வழிபட பெண்களுக்கும் அனுமதி உண்டு -SC title=

ஆண்களைப்போல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது! 

பொதுவாக சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழிபட செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் முன்பிருந்தே இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்தது. 

இது போன்று ஏற்கனவே, மஹாராஷ்டிர மாநிலம், சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பெண்களை அனுமதிக்கக் கோரி, தேசாய் தலைமையில், பல போராட்டங்கள் நடத்தபட்டது. 

இதற்க்கு ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் சமீபத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த உச்சநீதிமன்றம். ஆண்களைப்போல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் வழிபாடு என்பது சட்டம் இல்லை; தனிமனிதனின் உரிமை என்று தெரிவித்துள்ளது.  

மேலும், சபரிமலையில் பெண்களை வழிபட மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. 

 

Trending News