மனித சிறுநீரால் உருவான உலகின் முதல் செங்கல்: தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்

உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்! 

Last Updated : Dec 2, 2018, 06:14 PM IST
மனித சிறுநீரால் உருவான உலகின் முதல் செங்கல்: தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள் title=

உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்! 

சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி கட்டுமானப்பணிகளின் போது கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியாகிறது என தெரியவந்தது. அதனை அடுத்து, சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காக சிறுநீர் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் செங்கற்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனை சேர்ந்த ஆராயச்சியாளர்கள். 

அவர்களின் ஆராய்ச்சிக்காக கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரித்து அதில் மண் மற்றும் ‘யூரியேஸ்’ எனப்படும் என்ஜைமை தயாரிக்கும் பாக்டீரியாவையும் சேர்த்து செங்கல் தயாரித்தனர். (யூரியேஸ், சிறுநீரில் இருக்கும் யூரியாவை உடைத்து கல் போன்ற உறுதித்தன்மையை கொடுக்கின்றது.)

இந்த செங்கல் தயாரிக்க ஒரு வாரம் தேவைப்படுவதாகவும் இது சுற்றுசூழலுக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், தயாரிக்கப்பட்ட 2 நாட்களுக்கு மட்டுமே சிறுநீரின் வாசனை இந்த செங்கல்லில் இருப்பதாகவும் சில நாட்கள் கழித்து எந்தவிதமான வாசனையும் இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அடுத்த 40 ஆண்டுகளில் கட்டடங்கள் மூலம் வெளியேறும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தென் ஆப்ரிக்கா ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீர் மூலம் மறுசுழற்சி செய்யும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். 

உலகிலேயே முதன் முறையாக சிறுநீரை மறுசுழற்சி செய்து செங்கல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது. 

 

Trending News