மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம்! இதோ சில முக்கிய டிப்ஸ்!

மே 31-ம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

Last Updated : May 31, 2019, 01:49 PM IST
மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம்! இதோ சில முக்கிய டிப்ஸ்! title=

மே 31-ம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். 

புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம். 

கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடளில் ஊனமும் ஏற்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர்.உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார். புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும். 

எனவே புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு வேண்டும். முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது. 

Trending News