LPG Subsidy: ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்

ஆதார் அட்டையுடன் சிலிண்டர் இணைப்பு பெறும் இந்தத் திட்டம் அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் பொருந்தும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 12:27 PM IST
  • எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
  • ஆதார் அட்டையைக் காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பைப் பெற முடியும்.
  • ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்கத் தேவையில்லை.
LPG Subsidy: ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம் title=

புதுடெல்லி: எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOC), இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வசதியை வழங்குகிறது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இப்போது இணைப்பு பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பைப் பெற முடியும். கேஸ் சிலிண்டரைப் பெற இப்போது ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்கத் தேவையில்லை.

வாடிக்கையாளர்கள் பெரும் வசதியைப் பெறுவார்கள்!

நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, புதிய நகரத்தில் எல்பிசி இணைப்பு (LPG Connection) பெற விரும்புபவர்களுக்கு இது பெரிய வசதியாக இருக்கும். ஏனெனில் எரிவாயு நிறுவனங்கள் புதிய இணைப்புகள் கொடுக்க பல வகையான ஆவணங்களைக் கேட்கின்றன. குறிப்பாக முகவரிச் சான்று வழங்குவது அவசியம்.

நகரங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் முகவரிச் சான்று இருப்பதில்லை. இதனால், எல்பிஜி இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இப்போது எளிதாக சிலிண்டர் கிடைக்கும்.

இண்டேன் இந்த தகவலை அளித்தது

இந்த புதிய மற்றும் சிறப்பு வசதி குறித்த தகவலை அளித்த இண்டேன், 'ஆதார் எண்ணை (Aadhaar Number) காட்டி யார் வேண்டுமானாலும் புதிய எல்பிஜி இணைப்பைப் பெறலாம். இந்த வாடிக்கையாளர்களுக்கு முதலில் மானியம் இல்லாத இணைப்பு வழங்கப்படும். வாடிக்கையாளர் பின்னர் முகவரிச் சான்றினைச் சமர்ப்பிக்கலாம். இந்த சான்று சமர்ப்பிக்கப்பட்டவுடன், சிலிண்டர் மீதான மானியத்தின் பலனும் வழங்கப்படும். அதாவது, ஆதார் மற்றும் முகவரிச் சான்றுடன் இணைக்கப்படும் இணைப்பு, அரசின் மானியத்தின் கீழ் வரும். ஒரு வாடிக்கையாளர் விரைவில் இணைப்பைப் பெற விரும்பி, ஆனால், அவரிடம் முகவரி ஆதாரம் இல்லை என்றால், அவர் உடனடியாக கேஸ் இணைப்பைப் பெற, ஆதார் எண் மூலம் வழங்கப்படும் இந்த வசதியைப் பெறுவார்.’ என கூறியுள்ளது.

ALSO READ:இல்லத்தரசிகள் தலையில் இடி, சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறதா? 

இந்த வழியில் எல்பிஜி இணைப்பைப் பெறுங்கள்:

1. இதற்கு நீங்கள் முதலில் அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டும்.
2. பின்னர் LPG இணைப்பின் படிவத்தை நிரப்பவும்.
3. அதில் ஆதார் விவரங்களைக் கொடுத்து, படிவத்துடன் ஆதார் நகலை இணைக்கவும்.
4. படிவத்தில் உங்கள் வீட்டு முகவரி பற்றிய செல்ஃப் டிக்லரேஷனை அளிக்கவும்.
5. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் மற்றும் வீட்டின் எண் என்ன என்பதை அதில் தெரிவிக்க வேண்டும்.
6. இப்படி செய்தவுடன் உங்களுக்கு உடனடியாக எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.
7. இருப்பினும், இந்த இணைப்பின் மூலம் நீங்கள் அரசாங்க மானியத்தின் பலனைப் பெற முடியாது.
8. சிலிண்டரின் முழுத் தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டும்.
9. உங்கள் முகவரிச் சான்று (Address Proof) தயாரானதும், அதை எரிவாயு ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கவும்.
10. இந்த ஆதாரம் உறுதியான ஆதாரமாக இருப்பதால், இதை எரிவாயு நிறுவனம் உங்கள் இணைப்பில் சரியான ஆவணமாக பதிவு செய்யும்.
11. இதன் மூலம், உங்கள் மானியம் இல்லாத இணைப்பு மானிய இணைப்பாக மாற்றப்படும்.
12. சிலிண்டரை வாங்கும்போது, ​​முழுத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும்.
13. பின்னர் அரசு சார்பில் உங்கள் வங்கிக் கணக்கில் மானியம் டெபாசிட் செய்யப்படும்.

அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் பொருந்தும்
ஆதார் அட்டையுடன் சிலிண்டர் இணைப்பு பெறும் இந்தத் திட்டம் அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் பொருந்தும். வணிக சிலிண்டர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த திட்டம் 14.2 கிலோ, 5 கிலோ ஒற்றை, இரட்டை அல்லது கலப்பு சிலிண்டர் இணைப்புகளுக்கானது. இதே விதி FTL அல்லது Free Trade LPG சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.

எஃப்டிஎஸ் சிலிண்டர் ஷார்டி சிலிண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இதை நீங்கள் கடைகளிலும் வாங்கலாம். இந்த சிலிண்டரை எரிவாயு ஏஜென்சிகள் அல்லது பெட்ரோல் பம்புகளில் இருந்தும் வாங்கலாம். இதற்கு எந்த விதமான ஆவணமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காட்டி இந்த சிறிய சிலிண்டரை வாங்கலாம்.

ALSO READ:LPG Subsidy: சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News