கனவில் இதையெல்லாம் பார்த்தால் நீங்கள்தான் கோடீஸ்வரர்

கனவு சாஸ்திரத்தின்படி, சில கனவுகள் நாம் பணக்காரர்களாகப் போவதைக் குறிக்கின்றன. எந்த கனவுகள் நாம் பணக்காரர் ஆகும் குறிப்பை நமக்கு அளிக்கின்றன என பார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 07:23 PM IST
  • கனவில் பசுவையும் பசுவின் சாணத்தையும் பார்த்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • வெற்று பாத்திரங்களைக் கண்டால், இது மிகவும் நல்ல அறிகுறியாகும்.
  • கனவில் எலி தோன்றுவது நல்ல சகுனமாகக் கருதப்படுகின்றது.
கனவில் இதையெல்லாம் பார்த்தால் நீங்கள்தான் கோடீஸ்வரர் title=

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. இந்த கனவுகள் உங்களை எதிர்கால நிகழ்வுகளை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன. சில கனவுகள் மோசமானவையாகவும், சில கனவுகள் நல்லவையாகவும் இருக்கின்றன. அதே சமயம், கனவு சாஸ்திரத்தின்படி, சில கனவுகள் நாம் பணக்காரர்களாகப் போவதைக் குறிக்கின்றன. எந்த கனவுகள் நாம் பணக்காரர் ஆகும் குறிப்பை நமக்கு அளிக்கின்றன என பார்க்கலாம்.

 

கனவில் எலி தோன்றுவது

 

கனவில் எலி தோன்றுவது நல்ல சகுனமாகக் கருதப்படுகின்றது.

உங்கள் கனவில் ஒரு எலியை நீங்கள் கண்டால், உங்களுக்கு பண வரவு அதிகமாகப்போகிறது என பொருள். உங்கள் வாழ்க்கையின் வறுமை நீங்கும். உங்களுக்கு இப்படிப்பட்ட கனவு வந்தால், அதை உங்கள் வீட்டிலுள்ள இளைய குழந்தைக்கு சொல்லுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

 

காலி பாத்திரங்களைப் பார்ப்பது

 

கனவு சாஸ்திரத்தின் படி, உங்கள் கனவில் வெற்று பாத்திரங்களைக் கண்டால், இது மிகவும் நல்ல அறிகுறியாகும். இந்த கனவு நீங்கள் வரும் நாட்களில் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது. இந்த கனவு நீங்கள் பணக்காரர் ஆகப்போவதையும் சுட்டிக்காட்டுகிறது.

 

கனவில் பசுக்களையும் பசு சாணத்தையும் காண்பது

 

கனவில் ஒரு நபர் பசுவையும் பசுவின் சாணத்தையும் பார்த்தால், அவரது வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வறுமையை நீக்குவதோடு, இந்த கனவு வெற்றியின் வழியில் வரும் பிரச்சினைகளையும் நீக்குகிறது என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு கனவு வந்தால் அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது.

 

கனவில் விளக்குமாறைக் காண்பது

 

கனவில் ஒரு விளக்குமாறு பார்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. விளக்குமாறு அற்புதத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. உங்கள் கனவில் நீங்கள் விளக்குமாறைப் பார்த்தால், உங்கள் வீட்டிலிருந்து வறுமை விலகப்போகிறது என்றும் வீட்டில் பண வரவு அதிகரிக்கப்போகிறது என்றும் பொருள். இப்படிப்பட்ட கனவு கண்டால் அதை உங்கள் மனைவி அல்லது தாயிடம் சொல்லுங்கள்.

 

மின்னணு பொருட்கள் உடைவதைக் காண்பது

 

உங்கள் கனவில் மின்னணு பொருட்கள் உடைவதை நீங்கள் கண்டால், கனவு சாஸ்திரத்தின் படி, இந்த கனவு மிகவும் புனிதமானது. இருப்பினும், இந்த கனவைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. ஆனால் உங்கள் கனவில் மின்னணு பொருட்களைப் பார்த்தால், அது வாழ்க்கையில் வறுமையின் வரவைக் குறிக்கிறது.

Trending News