மகளை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு சிறை!

இணையதளம் மூலம் தன் 4 வயது மகளை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற அமெரிக்க தந்தைக்கு 60 ஆண்டு சிறை வாசம் கிடைத்துள்ளது!

Last Updated : Mar 25, 2018, 04:23 PM IST
மகளை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு சிறை! title=

வாஷிங்டன்: இணையதளம் மூலம் தன் 4 வயது மகளை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற அமெரிக்க தந்தைக்கு 60 ஆண்டு சிறை வாசம் கிடைத்துள்ளது!

கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியை சேர்ந்த ஆன்ட்ரிவ் ஜேம்ஸ் ட்ரூளி என்பவர் இணையதளம் மூலம் தனது மகளினை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்றுள்ளார். இந்த வழக்கில் பிடிப்பட்ட இவருக்கு தற்போது 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ட்ரூளி “Play with Daddie's Little Girl” என்ற விளம்பரத்தின் மூலம், தன் மகளுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவோர் தன்னை தொடர்புகொள்ளலாம் என விளம்பரப் படுத்திருந்தார். 

இந்த விளம்பரத்தினை பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், இக்குற்றச் செயலுக்கு விரும்பவதாக கூறி ட்ரூளியை தொடர்புக்கொண்டுள்ளார். பின்னர் ட்ரூளியின் வீட்டிற்கு இக்குற்றம் பற்றி உறுதிப் படுத்திக்கொள்ள காவல்துறை அதிகாரி சென்றுள்ளார். பின்னர் அங்கு டீரூளியால் காவல்துறை அதிகாரிக்கு ஒரு தனி அறைக்கான வழி காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் ஆடைகள் அற்ற நிலையில், ட்ரூளியின் மகள் படுக்கையில் கடத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளார். பின்னர் இந்த விளம்பரம் குறித்து உறுதிப்படுத்திக்கொண்ட காவல்துறை அதிகாரி ட்ரூளியினை கைது செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இக்குற்றச் செயலில் ஈடுப்பட்ட ட்ரூளிக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டை விதிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது!

Trending News