கமல்ஹாசனின் புதிய டிவிட்

Last Updated : Aug 2, 2017, 09:37 AM IST
கமல்ஹாசனின் புதிய டிவிட் title=

முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என என நடிகர் கமல் தனது டிவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு தொடர்ச்சியாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே அமைச்சர்களின் இணையபக்கங்கள் சில செயல்படவில்லை. தொடர்ந்து கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றியும், ஊழல் பற்றியும் குரல் எழுப்பி வருகிறார். 

இந்நிலையில் கமல்ஹாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்:-

"Dr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை எனவும் பின்பற்றுவோர் தொண்டர் அல்ல. மக்களும் குடியரசும் தான்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Trending News