கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2024, 12:45 PM IST
  • டாடா படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது.
  • ஸ்டார் படத்தில் ஜொலித்தாரா கவின்?
  • நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் கவின்.
கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார் title=

Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதனுடன் தற்போது நடிகர் கவின் வாங்கும் சம்பள விவரம் எவ்வளவு என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

நடிகர் கவின்:
நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். நேற்று இன்று நாளை, பீட்ஸா போன்ற படங்களில் சில மணித்துளிகள் வந்தாலும் ‘ஹே அது கவின்ல..’ என ரசிகர்களை சொல்ல வைத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்தார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற, அடுத்து இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது.

ஸ்டார் படத்தில் ஜொலித்தாரா கவின்? 
இதைத் தொடர்ந்து அண்மையில் நடிகர் ஸ்டார் என்கிற திரைபடத்தில் நடித்திருந்தார். ஸ்டார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தின் கதை, எதை நோக்கி நகர்கிறது என்பது முன்கூட்டியே கணிக்கும் வகையில் இருந்தாலும், கவின் இதில் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார். இதற்கு முன்னர், அவர் நடித்த படங்களில் ஒரு சாதாரண க்ரஷ் மெட்டீரியலாகவும், நார்மலான ஐடி பையனாகவும் நடித்து வந்த இவர், இந்த படத்தின் மூலம் நடிப்பு அசுரனாக மாறியிருந்தார்.

மேலும் படிக்க | கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் ப்ரொமோ வெளியீடு

கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம்:
ஸ்டார் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கவின் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் கவின்:
இந்நிலையில் தற்போது விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா என தகவல் வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. 

சம்பளத்தை உயர்த்திய கவின்:
தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் நடிகர் கவின் தற்போது டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ரூ.2 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. எனினும் தற்போது 2 கோடிக்கு மேல் இவரது சம்பளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News