ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா

2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 22, 2022, 07:36 PM IST
  • 68ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன
  • சிறந்த நடிகராக சூர்யா தேர்வு
  • சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வு
ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா title=

கொரோனா பரவலால் 2020ஆம் ஆண்டு தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும் ஓடிடி தளங்களும் அதிகளவில் பெருகின. இதனால் திரையரங்குகளில் வழக்கத்தைவிட குறைவான படங்களே வெளியாகின. அந்த ஆண்டு தமிழைப் பொறுத்தவரை திரையரங்குகளில் 85 படங்களும், ஓடிடி தளங்களில் 24 படங்களும் வெளியாகின.  இந்தச் சூழலில் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு தள்ளிப்போனது. 

இந்நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.

இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.

சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | மனிதர்கள் இல்லை.. அனிமேஷன் காட்சிகள் இல்லை.. பார்த்திபனின் அடுத்த புது முயற்சி?

இதுபோக,தமிழின் சிறந்த படத்துக்கான  விருதை வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் பெற்றது. அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமி பெற்றிருக்கிறார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News