பலாத்கார செய்யப்பட்ட பெண் போல நடந்து சென்றேன் - சல்மான்கான் சர்ச்சை பேச்சு

Last Updated : Jun 21, 2016, 02:41 PM IST
பலாத்கார செய்யப்பட்ட பெண் போல நடந்து சென்றேன் - சல்மான்கான் சர்ச்சை பேச்சு title=

மீடியாவுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சல்மான கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ‛‛சுல்தான். இப்படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். சுல்தான் படத்துக்கான உழைப்பு குறித்து சல்மான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சல்மான்கான் கூறியது:- "சுல்தான் படத்துக்காக ஒரு சண்டை காட்சிக்காக 6 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் என் எதிரியை தலைக்கு மேல் தூக்குவதும், அவரை கீழே தள்ளுவதும் என பலமுறை செய்ததால் உடல் வலி ஏற்பட்டு என்னால் நேராக நடக்க முடியவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து வரும் போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல் வளைந்து நெளிந்து நடந்தேன் என்று கூறியுள்ளார். சல்மானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சல்மான்கானின் இந்த பேட்டி சமுகவலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறும்போது:- சல்மான் கானுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

பெண்ணை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சல்மான்கான் உண்மையிலேயே பெண்கள் மீது மதிப்பி கொண்டவர் என்றால் மன்னிப்பு கோர வேண்டும்" என பாஜக செய்தி தொடர்பாளர் சாய்னா தெரிவித்துள்ளார்.

Trending News