"ஸ்கெட்ச்" திரைப்படத்தின் "அட்சி புட்சி" லிரிக்கல் வீடியோ!

நாளை காலை 10 மணியளவில் இப்படத்தின் "அட்சி புட்சி" லிரிக்கல் வீடியோ வெளியாகும் என நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

Last Updated : Dec 24, 2017, 07:03 PM IST
"ஸ்கெட்ச்" திரைப்படத்தின் "அட்சி புட்சி" லிரிக்கல் வீடியோ! title=

நாளை வெளியாகிறது "ஸ்கெட்ச்" திரைப்படத்தின் "அட்சி புட்சி" லிரிக்கல் வீடியோ!

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் `ஸ்கெட்ச்'. ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தமன்னா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். 

முன்னதாக இப்படத்தின் கனவே கனவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நாளை காலை 10 மணியளவில் இப்படத்தின் "அட்சி புட்சி" லிரிக்கல் வீடியோ வெளியாகும் என நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

Trending News