பாகுபலி-2: ரூ.600 கோடி வசூல் செய்து உலக சாதனை

Last Updated : May 2, 2017, 12:45 PM IST
பாகுபலி-2: ரூ.600 கோடி வசூல் செய்து உலக சாதனை title=

சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன.

இந்நிலையில் பாகுபலி-2 படம் வெளியான 4 நாட்களில் ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

* ஆந்திரா - தெலுங்கானாவில் ரூ.25 கோடி

* தமிழகத்தில் ரூ10 கோடி

* கர்நாட்காவில் ரூ.9 கோடி

* கேரளாவில் ரூ.5 கோடி 

என நேற்று வரை வசூல் செய்து உள்ளது. 4 வது நாளில் தென்னிந்தியாவில் மட்டும் ரூ. 250 கோடியை  வசூல் செய்து உள்ளது.

பாகுபலி-2 இந்தி நேற்றுவரை ரூ.35 கோடி வசூல் செய்து உள்ளது.முதன்முறையாக பாகுபலி-2  மொத்தம் 600 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளது.

Trending News