பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா?

Bigg Boss 7 Tamil Eviction: பிக்பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரும் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 5, 2023, 06:36 AM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் ஆரம்பித்தது.
  • பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்டார்.
  • இன்னொரு போட்டியாளரும் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா? title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் (Bigg Boss 7 Tamil) தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. போட்டி தொடங்கி 32 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், வாரா வாரம் எவிக்ஷனும் சுவாரஸ்யமாக நடைப்பெற்று வருகிறது. அந்த நிலையில், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 7:

கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து சீசன்களையும் போல, இந்த சீசனையும் கமல்ஹாசனே (Kamal Haasan) தொகுத்து வழங்கி வருகிறார். பிற சீசன்களில் ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீடு, இந்த சீசனில் இரண்டு வீடுகளாக பிறிக்கப்பட்டது. அந்த இன்னொரு வீட்டிற்கு ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு, இந்த சீசனில் வித்தியாசமான டாஸ்குகள், வித்தியாசமான தண்டனைகள் வழங்கப்பட்டன. வாரா வாரம், வாக்குகள் குறைவாக பெற்ற நபர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர் (BB 7 Tamil Eviction). அந்த வகையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

‘ரெட் கார்டு’ காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்:

நடிகர் பிரதீப் ஆண்டனி, பிக்பாஸ் இல்லத்தின் வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால், இந்த பிக்பாஸ் சீசன் ஆரம்பித்ததில் இருந்தே இவர் மீது பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பிரதீப் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தியதால், அனைத்து வாரங்களும் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்களின் வாக்குகளால் காப்பாற்றப்பட்டு வந்தார். கடந்த வாரம் நடந்த ஒரு டாஸ்கின் போது, சக போட்டியாளர் கூல் சுரேஷை அவர் மரியாதை குறைவாக தகாத வார்த்தைகளால் பேசினார். இது குறித்து சக போட்டியாளர்கள் கேட்ட போதும் “அப்படிதான் செய்வேன்..” என்று கூறினார். இதனால் ஒன்று கூடிய சில பிக்பாஸ் போட்டியாளர்கள், நேற்றைய எபிசாேடில் சிகப்பு துணியை காண்பித்து ‘உரிமை குரல்’ எழுப்பினர். 

மேலும் படிக்க | பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!

பிரதீப்பின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:

மாயா, பூர்ணிமா, நிக்ஸன், ரவீனா, அன்னபாரதி, கூல் சுரேஷ், சரவண விக்ரம் மற்றும் விஷ்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் பிரதீப் குறித்த பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்த புகாரில், “பாதுகாப்பின்மையாக உணர வைக்கிறார், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, தரக்குறைவாக பேசுகிறார்..” போன்ற வாக்கியங்களை பயன்படுத்தினர். இதை கேட்ட கமல், பிரதீப்பிற்கு ரெட் கார்டு காெடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை போட்டியாளர்களிடமே தனித்தனியாக அழைத்து கேட்டார். அதில் பெரும்பாலானோர் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அவருக்கு ரெட் கார்டு (BB 7 Tamil Red Card) காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

Anna Bharathi

எவிக்ட் செய்யப்பட்ட வைலட் கார்டு போட்டியாளர்:

கடந்த வாரம், இரண்டு எவிக்ஷன் நடந்தது. அந்த எபிசோடில் யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இரண்டு பேரை வெளியே அனுப்பி விட்டு, 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பினர். அதில் ஒருவராக வந்தவர், அன்னபாரதி. மேடை மற்றும் பட்டிமன்ற பேச்சாளரான இவர், போட்டிக்குள் நுழைந்தவுடன் ஸ்மால் பாஸ் இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வாரம் நாமினேஷனிலும் இருந்தார். இவருக்கு குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளதால், இவரும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி! ரெட் கார்ட் கொடுத்த கமல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News