அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது, கொந்தளித்த நெட்டிசன்கள்

Bigg Boss Tamil 6 Title Winner Azeem: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது.  இந்த ஆறாவது சீசனில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றிருக்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 23, 2023, 03:53 PM IST
  • அசீம் வெற்றியை ஏற்க மறுக்கும் ரசிகர்கள்.
  • இணையத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள்.
  • பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம்.
அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது, கொந்தளித்த நெட்டிசன்கள் title=

பிக் பாஸ் 6 தமிழ் இறுதிப் போட்டி நேற்று ஒளிபரப்பானது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் இப்போட்டி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார். இத்தனை நாட்கள் காதல், மோதல், நகைச்சுவை, வன்மம் என பல உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை நாம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களிடமிருந்தும் கண்டு ரசித்தோம். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து வெளியேறினார். அபருக்கு அடுத்ததாக இந்த போட்டியில் இருந்து நடிகை சாந்தி, ஷெரினா, நான்காம் வாரத்தில் மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும், ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ஏழாம் வாரத்தில் குயின்ஸியும், எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமியும், பத்தாம் வாரத்தில் மணிகண்டனும், அதுக்கு அடுத்த வாரம் ரச்சித்தாவும், பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகேயும் வெளியேறினார்.

இதற்கிடையில் சமீபத்தில் கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷன் நடத்தப்பட்டது இதில் அதிர்ச்சிகரமாக மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர்...பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இததனை நாட்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், ஆறாவது சீசன் நேற்றைய தினம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆறாவது சீசனில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றிருக்கிறார். அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோருடன் போட்டியிட்டு இறுதி சுற்றில் அசீம் வெற்றி பெற்றுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே எல்லா போட்டியாளர்களிடமும் கோபத்தை காட்டிய அசீம் எப்படி டைட்டில் வின்னர் பட்டத்திற்கு தகுதியானவர் என நெட்டிசன்கள் கொந்தளித்த வருகின்றனர்.

இதற்கிடையில் விஜய் டிவி தொடர்களின் கதாநாயகன் என்பதால் மட்டுமே அசீம் வெற்றி பெற்று உள்ளதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் விஜய் டிவி ஆளுக்கு டிராபி கொடுத்துள்ளது என பலர் டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6 Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்? தீயாக பரவும் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News