தனது முன்னாள் மனைவியுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்!

Dhanush Captain Miller: தனுஷின் கேப்டன் மில்லர் படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2023, 11:14 AM IST
  • பொங்கல் அன்று வெளியாகும் கேப்டன் மில்லர்.
  • தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • சத்ய ஜோதி இந்த படத்தை தயாரித்துள்ளது.
தனது முன்னாள் மனைவியுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்! title=

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் தனுசும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்க ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர்.  ஜனவரி 2022ல், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "18 வருடங்கள் நாங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள்என ஒன்றாக இருந்தோம். இந்த வாழ்க்கை பயண வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என்று இருந்தது. ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து தனித்தனியாக வாழ முடிவு எடுத்துள்ளோம். எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிப்பதற்குத் தேவையான தனியுரிமையை எங்களுக்குத் தாருங்கள். ஓம் நமசிவாயா! அன்பைப் பரப்புங்கள்" என்று எழுதி இருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

மேலும், இருவரும் மீண்டும் இணையவுள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது.  தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு செய்தார்களே தவிர, அவர்கள் இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. விவாகரத்து பெற்ற பிறகு இருவரும் எங்குமே ஒன்றாக பொதுவெளியில் வரவில்லை.  ஆனால், எப்போது இருவரும் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.  தனுஷ் முக்கிய பட விழாக்களில் தன் இரு மகன்களையும் அழைத்து வருகிறார்.  ஐஸ்வர்யா விசேஷ நாட்களில் மகன்களுடன் புகைப்படங்கள் எடுத்து பகிர்கிறார்.  இதன் மூலம் இருவருமே தாங்கள் தங்கள் மகனுடன் இருப்பதை உறுதிபடுத்தி கொள்கின்றனர். 
இதனால், அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் என்றே கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனராக திரும்பி உள்ள படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.  மேலும், ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.  லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களாக லால் சலாம் படம் பொங்கல் அன்று வெளியாகாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  ஏற்கனவே, பொங்கல் 2024ல் அயலான், அரண்மனை 4 போன்ற படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனால் தங்களான் ஜனவரி 26ம் தேதி வெளியாகிறது.  தற்போது லால் சலாம் படம் தள்ளி போவதால், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பொங்கல் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.  இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.  

தனுஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் கேப்டன் மில்லர். இது தமிழில் வெளியாகும் அடுத்த பெரிய படம் ஆகும். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. முன்னதாக, படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிரியங்கா மோகன், சிவராஜ்குமார்,  நிவேதிதா சதீஷ் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  ஒருவேளை பொங்கல் அன்று லால் சலாம் படம் வெளியானால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் மோதலை எதிர்கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News