'எனக்கும் தற்காப்பு கலை தெரியும்...' விஜய்யிடம் கூறிய மிஷ்கின் - லியோ சுவாரஸ்ய தகவல்கள்!

Leo Movie Update: விஜய் நடிப்பில் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பின் அனுபவத்தையும், அதில் விஜய்யுடனான அனுபவத்தையும் இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2023, 01:45 PM IST
  • சில நாள்களுக்கு முன் மிஷ்கின் சென்னை திரும்பினார்.
  • பொது நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசிய வீடியோ வைரலாகிறது.
'எனக்கும் தற்காப்பு கலை தெரியும்...' விஜய்யிடம் கூறிய மிஷ்கின் - லியோ சுவாரஸ்ய தகவல்கள்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.  படத்தின் பணிகள் ஆரம்பமாவதற்கு முன் இருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது.

காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரில் படக்குழுவினர் 'லியோ' படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இங்கு படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 ஏற்கனவே படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவல்களும் வெளியானது. அதன்படி படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, மேத்யூ தாமஸ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.  ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் பெரியளவில் நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகிறது.

மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் மாஸாக வரும் 'தி லெஜண்ட்' - 7 மாதங்களுக்கு பின்... எந்த ஓடிடியில் தெரியுமா?

இதில், மிஷ்கினின் பாகம் முழுவதும் படமெடுக்கப்பட்டு விட்ட நிலையில், மிஷ்கின் சில நாள்களுக்கு சென்னை திரும்பினார். மேலும், படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரையும் பாராட்டி அறிக்கைவிட்டிருந்தார். அதில், படத்தின் ஆக்சன் காட்சிகளையும் சிலாகித்து மிஷ்கின் எழுதியிருந்தார். 

இந்நிலையில், தற்போது ஒரு பொது நிகழ்ச்சியின் மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், மிஷ்கின் விஜய்யுடன் ஆக்சன் காட்சிகளில் நடித்த அனுபவம் மற்றும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். 

அதில்,"சண்டை காட்சிகளில் படமாக்கி கொண்டிருந்தபோது, விஜய் தன்னை மிகவும் கவனமாக அடித்து வந்தார். மிகவும் கேரிங் உடன் செயல்பட்டார். நான் உடனே, இல்லை விஜய், நீங்கள் வழக்கம்போல் சண்டை காட்சிகளில் நடியுங்கள். எனக்கும், இந்த சண்டை குறித்தும், தற்காப்பு கலை குறித்தும் சில புரிதல் இருக்கிறது என்றேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் என்னிடம் ஓடிவந்து, ஒன்றும் ஆகவில்லையே என கூறினார். அதனால், அவர் நிஜ ஹீரோவாக உள்ளார்" என பாராட்டியிருந்தார். 

மேலும் படிக்க | நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News