50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே

Director Rajamouli Salary And Net Worth: இயக்குநர் ராஜமெளலி ஒரு படத்துக்கு தற்போது 50 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 10, 2023, 05:42 PM IST
  • ராஜமெளலியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
  • 1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர்.
  • இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ராஜமௌலி.
50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே title=

Happy Birthday SS Rajamouli: உலகளவில் பிரபலமான இந்திய இயக்குநர்களில் ஒருவர் தான் ராஜமெளலி. இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

இயக்குனர் ராஜமெளலி:
பிரபல திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் மகனான ராஜமவுலி, தன் தந்தையை போல் சினிமாவின் மீது தீரா காதல் கொண்டிருந்தார். உலகளவில் பிரபலமான இந்திய இயக்குநர்களில் ஒருவரான ராஜமெளலி (SS Rajamouli) சமீபத்தில் அனைத்து ஹாலிவுட் இயக்குநர்கள் பார்வையும் கவர்ந்தார். 

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

முதல் முதலில் இவர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் பேசப்பட்டன. அதில் கற்பனையின் உச்சமாக ஈ-யை வைத்து இவர் இயக்கிய நான் ஈ என்கிற ஆக்‌ஷன் திரைப்படம் வேறலெவல் ஹிட் அடித்தது. பின்னர் பாகுபலி என்கிற வரலாற்று படத்தை எடுத்து பாலிவுட்டுக்கே வசூலில் சவால்விட்டார் ராஜமவுலி. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற வரலாற்று படத்தை இயக்கி, இந்தியாவிற்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கரையும் தட்டி வந்தார். இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்தது. அடுத்து மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ராஜமெளலியின் சொத்து மதிப்பு: 
இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர் தற்போது 50 முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சுமார் 158 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கும் ராஜமெளலியிடம் (Rajamouli Net Worth) 1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்கள் உள்ளது, மேலும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல கோடி மதிப்பில்ல பங்களாவும் உள்ளது. அதுமட்டுமின்றி ராஜமௌலிக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் உள்ளது. அதன்மூலமும் நன்கு லாபம் பார்த்து வரும் இவர், ரியல் எஸ்ட்டேட்டிலும் முதலீடு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

ராஜமெளலியின் 50 வது பிறந்தநாள்:
இந்நிலையில் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இயக்குனர் ராஜமௌலி. இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News