பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் இன்று திங்கட்கிழமை. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்களன்று நாமினேஷன் நடைபெறும். நேற்று நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியேறினார். இன்று நாமினேஷன் லிஸ்ட் தயாராகிவிட்டது.
வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இந்த நாமினேஷன் லிஸ்டில், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், ஆரி, அனிதா சம்பத், ஆஜித் என 5 பேர் இடம் பிடித்தனர். சுரேஷ் சக்கரவர்த்திக்கும், ஆரிக்கும் தான் நாமினேஷனில் அதிகபட்ச வாக்குகள் விழுந்தன. அதிலும் இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர்.
சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் இருந்தால் அமைதி குலையும் என்றும், அவர் சண்டை மூட்டுகிறார் என்று கூறி நாமினேட் செய்தால், ஆரி அட்வைஸ் திலகம் நமக்கு வேண்டாம் என்று சொல்லி, கட்டம் கட்டிவிட்டார்கள்.
பிறகு, 5 வோட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த ஆஜித்தை அந்த பட்டியலில் இடம் பெற பலரும் சொன்ன காரணம் என்ன தெரியுமா? கேட்டால் சிரிப்பாகத் தான் இருக்கிறது. எவிக்ஷன் ஃபிரி பாஸ் (Eviction Free Pass) வைத்திருப்பதால் அவர் ஆபத்தானரவாராகிவிட்டார். அதை சீக்கிரம் பயன்படுத்துங்க பாஸ் என்று கூறி அஜித்தையும் நாமினேஷன் பட்டியல் தள்ளிவிட்டார்கள்.
4 வோட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்த அனிதா சம்பத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் வருவதாகவும், பிரச்சனைகளை பேசியே பெரிதாக்கிவிடுவார் என்று ஹவுஸ் மேட்ஸ் சொல்லிவிட்டார்கள். பாலாஜி முருகதாஸ் இரண்டு ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார்.
இந்த லிஸ்டில் எஸ்கேப் ஆனவர்கள் 4 பேர் தப்பித்தனர். கேப்டன் ரியோ லிஸ்டில் இடம் பெறவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் வாரம் என்பதால் அர்ச்சனா பட்டியலில் இடம் பெறவில்லை. சனம் ஷெட்டி, வேல்முருகன் ஆகிய இருவருமே சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் இருவரும் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
இப்படி நாமினேஷன் என்ற விஷயத்தை சுற்றியே இந்த வார முதல் நாளான்று, பிக்பாஸ், பிக் ரவுண்ட் வந்துவிட்டது...
இதையும் படிக்கலாமே | Flipkart: 32 அங்குல Realme ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி தள்ளுபடி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR