பிரேமம் கலந்த அர்ஜுன் ரெட்டியாக தமிழில் ஒரு Bachelor! Bachelor விமர்சனம்!

ஜிவி பிரகாஷ் - திவ்யபாரதி நடிப்பில் உருவான Bachelor திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. Rating - 3.5 / 5  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 02:35 PM IST
பிரேமம் கலந்த அர்ஜுன் ரெட்டியாக தமிழில் ஒரு Bachelor! Bachelor விமர்சனம்!  title=

தமிழில் காதல் படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும் புதிய காதல் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு குறையாமல் இல்லை.   தமிழ் படங்களை தாண்டி கேரளத்தில் வெளியான பிரேமம், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி போன்ற படங்கள் தமிழகத்தில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.  அந்த வரிசையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள bachelor படமும் இணைய உள்ளது.  ஐடியில் பணிபுரியும் இருவருக்கிடையே நடக்கும் காதல், பிணைப்பு, சண்டை, பிரிவு போன்றவற்றை மலையாள பட பாணியில்  தமிழ் ரசிகர்களின் மனதிற்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சதீஷ்.  இது இவருக்கு முதல் படமே என்றாலும் தான் சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறார். 

bachelor

காதல் படம் என்றாலே ஹீரோயினை பார்த்தவுடன் காதல், பின்பு ஹீரோயின் பின்னால் செல்வது, இருவரும் சேர்வது, பின்பு பிரிவது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி உள்ளார் இயக்குனர் சதீஷ்.  பெரிதாக ஹீரோயிசம் இல்லாத, டயலாக்குகள் இல்லாத, தன்னை தாழ்த்தியே கதை முழுவதும் இருக்கப்போகிறது என்று தெரிந்தும் நடித்த ஜிவி பிரகாஷ்க்கு முதலில் பாராட்டுக்கள்.  நாயகியாக முதல் படத்திலேயே இப்படி ஒரு கேரக்டர் அமைய திவ்யபாரதிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  படம் முழுக்க மேக்கப்பே இல்லாமல் நடித்திருந்தும் படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.  ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறியுள்ளார் திவ்யா.  

bachelor

இவர்களைத் தொடர்ந்து படம் முழுக்க கூடவே வரும் பகவதி பெருமாள், நக்கலைட்ஸ் அருண் மற்றும் அவரது நண்பர்கள் ரசிக்க வைக்கின்றன.  இரண்டாம் பாதியில் வந்தாலும் அதன்பிறகு கதையை நகர்த்த உதவி செய்கிறார் முனிஸ்காந்த்.  நம் கண் முன்னே நடப்பது போல் ஒவ்வொரு காட்சியமைப்புகளும் எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கென்றே தேனி  ஈஸ்வரை தனியாக பாராட்டலாம். நண்பர்களுக்கிடையே நடக்கும் காட்சிகள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.   சிந்து குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.  கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இப்படத்தை ஷான் லோகேஷ் சிறப்பாக எடிட் செய்திருக்கிறார்.  படத்தில் ட்ரிம் செய்ய வேண்டிய காட்சிகள் ஏகப்பட்டது இருந்தாலும் அவை கதைக்கு வலு சேர்க்கின்றன.   ராட்சசன், ஓ மை கடவுளே போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பேக்டரி நிறுவனம் இந்தமுறையும் அதே போல் ஒரு நல்ல படத்தை தயாரித்து உள்ளது.

bachelor

ஜிவி பிரகாஷ்க்கும் திவ்யபாரதிக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக செட் ஆகி உள்ளதால் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் காதலும் நமக்கும் வலியை தருகின்றன.  இப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்கு சம்மதித்த ஹீரோ ஜிவி பிரகாஷ்க்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.  அறிமுக நாயகன் கூட சிறிது யோசிக்கும் இப்படி ஒரு கதையின் முடிவிற்கு ஜிவியை எப்படி இயக்குனர் சம்மதிக்க வைத்தார் என்பதே ஆச்சரியம்.  தனது நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கச்சிதமாக கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துள்ளார் சதீஷ்.  நீண்ட நாட்களுக்கு பிறகு இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு படமாக வெளிவந்து வெற்றிநடை போட உள்ளது இந்த Bachelor.

ALSO READ ஒரே மாதத்தில் இவ்ளோ படங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த NETFLIX!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News