அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு

Income Tax Day 2022: அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்தது... வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கெளரவித்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2022, 02:09 PM IST
  • வருமான வரி தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது
  • தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த்
  • ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது
அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு title=

வருமான வரி தினம் 2022: வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார். வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டுகிறது.

பிரிட்டனின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.1860ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியன்று இந்தியாவில் வரி விதித்த அவர், செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் வரி விதித்தார்.

மேலும் படிக்க | பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு

சர் ஜேம்ஸ் வில்சன் நினைவாகவும், வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டும் விதமாகவும் வருமான வரி தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.

Rajini

வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | சாதியுடன் சேர்ந்ததுதான் அறிவு ஆனாலும் நிம்மதி இல்லை - ரஜினியின் விரக்தி பேச்சு

சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார்.

நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது என்று தெரிவித்த அவர், 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் அதிகம் வரி செலுத்தியதற்காக இன்று பாராட்டுகளை அள்ளும் நடிகர் ரஜினிகாந்த், இதற்கு முன்னர் பல முறை வருமான வரித்துறையுடன் முரண்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News