இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் புதிய அப்டேட்!

 இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிவிட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது. 

Last Updated : Dec 24, 2017, 10:24 AM IST
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் புதிய அப்டேட்! title=

சந்தோஷ் பி.ஜெயக்குமார் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை தற்போது இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். 

இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிவிட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது. 

Trending News