‘தளபதி 68’ படமும் சினிமாட்டிக் யுனிவர்ஸா? வெங்கட் பிரபுவின் பதிவால் குழப்பம்!

விஜய் நடித்து வரும் தளபதி 68 படமும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்டில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 26, 2023, 02:23 PM IST
  • தளபதி 68 படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
  • இப்படம் சினிமாட்டிங் யுனிவர்ஸில் ஒன்று என கூறப்படுகிறது.
  • எந்த படத்தில் இணைய உள்ளது தெரியுமா?
‘தளபதி 68’ படமும் சினிமாட்டிக் யுனிவர்ஸா? வெங்கட் பிரபுவின் பதிவால் குழப்பம்! title=

நடிகர் விஜய்யும் வெங்கட் பிரபுவும் முதன்முறையாக கைக்கோர்த்துள்ள படம், தளபதி 68. இந்த படமும் லியோ படம் போல சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் ஒரு கதை என கூறப்படுகிறது. 

தளபதி 68:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பல படங்களில் கைக்கோர்க்க முயற்சி செய்தும், இவர்களால் அது முடியாமல் போனது. இதையடுத்து, அதற்கு தக்க சமயம் கூடி வரவே, இருவரும் தற்போது இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். 

‘தளபதி 68’ படத்திற்கான பூஜை, சில வாரங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து காெண்டனர். இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரமும் பூஜை விழா வீடியோ வெளியான பிறகுதான் தெரிய வந்தது. 

சினிமாட்டிக் யுனிவர்ஸ்? 

தளபதி 68 படத்திற்கு முன்னர் நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம், அவர் உருவாக்கிய ‘லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற கான்செப்டில் ஒன்றாக இருந்தது. இந்த எல்.சி.யுவில் ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது லியோவும் அப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஹாலிவுட்டில் மார்வல், டிசி போன்ற சூப்பர் ஹீரோ படங்களுக்கான யுனிவர்ஸ் உள்ளன. அது போலத்தான் தமிழிலும் இந்த யுனிவர்ஸ் கான்செப்டும் கொண்டு வரப்பட்டன. தற்போது உருவாகி வரும் தளபதி 68 படமும் அப்படிப்பட்ட சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்களில் ஒன்று என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்த ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற சிறந்த தமிழ் படங்கள்!

வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு..

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 வெளியான ‘மாநாடு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. நேற்றுடன், இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்தது. இதையடுத்து, நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “இரண்டு வருடங்களாக இந்த படத்தை கொண்டாடியதற்கு நன்றி. இது போன்று இன்னொரு டைம் லூப்பில் சிக்க்கொள்ள ஆசையாக இருக்கிறது. இந்த மாஸ்டர்பீஸை உருவாக்க உதவிய அனைவருகும் நன்றி” என்று கூறியிருந்தார். 

சிம்புவின் இந்த பதிவிற்கு ரிப்ளை செய்த வெங்கட் பிரபு, “லூப் தொடரும்..” என்று குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், “ஒரு வேளை மாநாடு படத்திற்கும் தளபதி 68 படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ..” என்று சந்தேகித்து வருகின்றனர். 

தளபதி 68 பட நடிகர்கள்..

தளபதி 68 படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் பலர் உள்ளனர். இதற்கு முன்னர் விஜய்யின் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய பிரபு தேவா, பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் பிரசாந்த், மோகன், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர். தளபதி 68 படமும் டைம் டிராவல் கதையை பின்புலமாக கொண்டிருக்கும் என்றும், இதில் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | “தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்” தமிழ் சினிமாவின் கார்த்திகை தீப பாடல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News