Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..?

Jailer Songs Release: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைப்பெறுவதை தொடர்ந்து, அப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2023, 08:00 PM IST
  • ஜெயிலர் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
  • மொத்தம் 8 ட்ராக்குகள் இடம் பெற்றுள்ளன.
  • ரசிகர்கள் இவற்றிற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..? title=

Jailer Songs Release: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. 

பாடல்கள் அனைத்தும் ரிலீஸ்:

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெறுவதை தொடர்ந்து, அப்படத்தின் அனைத்து பாடல்களும் ஜூக் பாக்ஸாக வெளியாகியுள்ளது. 

காவாலா, ஹுக்கும் உள்பட மொத்தம் 8 இசை ட்ராக்குகள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் தீம், ரத்தமாரே, முத்துவேல் பாண்டியன் தீம், ஜெயிலர் ட்ரில், அலப்பற தீம் போன்ற அனைத்து ட்ராக்குகளும் வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஒரு சிலர், இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்ததாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா:

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய அனைவரும் வருகை தந்துள்ளனர். ரஜினி, நெல்சன், அனிருத் ஆகிய மூவரும் கருப்பு உடையில் வருகை தந்துள்ளனர். 

பாடல்களுக்கு நல்ல வரவேற்பு:

ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக ’காவாலா’ வெளியானது. ஜனி மாஸ்டரின் நடன இயக்கத்தில் இப்பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். லிரிக்கல் வீடியோ வடிவில் வெளியான இப்பாடலுக்கு ரசிகர்கள் பயங்கர வரவேற்பு அளித்தனர். வெளியான இரண்டரை வாரங்களிலேயே காவாலா பாடல் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இதையடுத்து வெளியான ஹுக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தனர். 

மேலும் படிக்க | DD Returns Vs. LGM : ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம் எது..? தியேட்டரில் எந்த படத்தை பார்க்கலாம்..?

சொதப்பிய ஜுஜுபி பாடல்:

பிற இரண்டு பாடல்களை போல அல்லாமல், மூன்றாவதாக வெளியான ஜுஜுபி பாடல் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. இந்த பாடலை தீ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு ஏற்றார் போல அவரது குரல் சூட் ஆகவில்லை எனவும் லிரிக்ஸ் மிகவும் மொக்கையாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் ஒரு சிலர் பாடல் நன்றாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஜெயிலர் பட விழா அரங்கில் விபத்து:

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் அரங்கில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் பலர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அலங்கார நிகழ்ச்சிகள் அமைக்கும் பணிகளிலும் சிலர் வேலை செய்து வந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மாலா என்ற 26 வயது இளைஞரும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் இருந்த போது இவருக்கு மின்சாரம் தாக்கி இவர் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் இவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

படக்குழு:

ஜெயிலர் படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரை தவிர இன்னும் சில ஸ்டார் நடிகர்களும் இருக்கின்றனர். மலையாள திரையுலகின் பிரபல நடிகராக அறியப்படும் மோகன் லால் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடித்துள்ளார். எல்லா நெல்சன் திலீப் குமாரின் படங்களிலும் வரும் ரெடின் கிங்கஸ்லி உள்பட பிற நகைச்சுவை நடிகர்கள், இந்த படத்திலும் இடம் பிடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிலீஸ்:

ஜெயிலர் திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். பீஸ்ட் படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிப்பாரா நெல்சன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு படம் வெளியான பிறகுதான் பதில் தெரியும். 

மேலும் படிக்க | Jailer Audio Launch LIVE: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடப்பது என்ன..? சுட சுட லைவ் அப்டேட்ஸ் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News