ஷாருக்கானுக்கு 100 கோடி-நயன்தாராவுக்கு இவ்ளோதானா..! ‘ஜவான்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

Jawan Salary Details: அட்லீ இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ஜவான் படத்தில் நடித்தவர்கள் பெற்ற முழு சம்பள விவரம் தெரியுமா உங்களுக்கு..?   

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 07:41 AM IST
  • அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ஜவான்.
  • ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார்.
  • படக்குழுவின் முழு சம்பள விவரம்.
ஷாருக்கானுக்கு 100 கோடி-நயன்தாராவுக்கு இவ்ளோதானா..! ‘ஜவான்’ படக்குழுவின் சம்பள விவரம்..! title=

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது, ஜவான். இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் துணை கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இந்தி நடிகை தீபிகா படுகோன் கேமியோ ரோலில் வருகிறார். இந்த படக்குழுவின் முழு சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

‘ஜவான்’ திரைப்படம்..

படைவீரரை இந்தியில் ‘ஜவான்’ எனக்குறிப்பிடுவர். அட்லீ குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த படத்திலும் நடிகர் ஷாருக்கான் தனக்கென ஒரு படையை உருவாக்கி அவர்களுடன் எதிரிக்கு எதிராக செயல்படும் போர் வீரராக வருகிறார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக வருகிறார். 

மேலும் படிக்க | விஜய் சேதுபதி பயங்கரமான நடிகர்: ஷாருக்கான் புகழாரம்

சம்பள விவரம்..

தமிழ் இயக்குநர் ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தாலும், இந்த படத்தில் நடிப்பவர்களில் முக்கால் வாசிப்பேர் பாலிவுட் நட்சத்திரங்களாக உள்ளனர். கோலிவுட் நட்சத்திரங்களை விட இந்த பாலிவுட் நட்சத்திரங்கள்தான் அதிக சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். இந்த படத்திலும் ஷாருக்கான், தீபிகா என அதிகம் வருவாய் வாங்கும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களில் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

ஷாருக்கான்:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் பிரபல நடிகர் ஷாருக்கான். 50 ரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையை தாெடங்கிய இவர், இன்று இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45-60 கோடி வரை மட்டுமே ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று வந்தார். இதையடுத்து, இந்த ஆண்டின் தாெடக்கத்தில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்ததை அடுத்து, தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தியுள்ளாராம், ஷாருக்கான்.  இவர், ஜவான் படத்திற்காக 100 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். 

தீபிகா படுகோன்:

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அறியப்படும் நாயகிகளுள் ஒருவர், தீபிகா படுகோன். சுமார் 17 வருடங்களுக்கும் மேலாக, இவர் திரைத்துறையில் இருக்கிறார். தனது முதல் படத்தில் சம்பளமே வாங்காமல் இவர் நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதோ 15-30 கோடி ரூபாய் வரை இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறாராம். ஜவான் படத்தில் இவர் காமியோ கதாப்பாத்திரத்தில் வருவதால் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் வாங்கியிருக்க மாட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது. 

நயன்தாரா:

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் வந்த நயன்தாரா, தற்போது தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். இவர், தமிழ் படங்களில் ஒரு படத்தில் நடிக்க 5-10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். ஜவான் படத்தில் நடிப்பதற்காக இவர் 11 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் இந்த படத்தின் இரண்டாவது மெயின் லீட் எனக்கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

பிரியாமணி:

‘பருத்திவீரன்’ பட நாயகி பிரியாமணி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் பிரபலமானவர். இவருக்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஷாருக்கான்-தீபிகா படுகோன் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ‘1234’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அதிலிருந்து ஷாருக்கானிடம் நல்ல நட்பு பாராட்டும் நடிகையாகவும் உள்ளார். இவரும் ஜவான் படத்தில் ஷாருக்கானின் படையில் ஒருவராக செயல்படுகிறார். இந்த படத்திற்காக இவர் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். 

விஜய் சேதுபதி:

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தவர், விஜய் சேதுபதி. மெல்ல மெல்ல ஹீரோவாக உயர்ந்து உச்சம் தொட்ட இவர் ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். கோலிவுட்டை தாண்டி கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் சில பிரபலமான நட்சத்திரங்கள் நடித்த படங்களில் முகம் காட்டி வருகிறார், விஜய் சேதுபதி. தனது முதல் படத்தில் 7 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கிய இவர், தற்போது ஜவான் படத்திற்காக சுமார் 21 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News