சாதித்து காட்டிய அட்லீ! ஜவான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Jawan box office collection: ஜவான் படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Sep 17, 2023, 12:27 PM IST
  • அட்லீயின் முதல் பாலிவுட் படம் ஜவான்.
  • ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார்.
  • விஜய் சேதுபதி வில்லனாக அசத்தி உள்ளார்.
சாதித்து காட்டிய அட்லீ! ஜவான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? title=

ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய படக்குழு, செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில்,  மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர்.  உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு  மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல  புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு,  ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. 

மேலும் படிக்க | Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக்குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின் போது நேரலையில் இசையமைத்தார், கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய  ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  நாயகி நயன்தாரா  சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்பினார். இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த  செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சாலேயா பாடலுக்கு SRK மற்றும் தீபிகா படுகோனே நடனமாடி அசத்தினர். இதற்கு முன்னதாக, SRK நாட் ராமையா வஸ்தாவய்யா பாடலையும் நேரலையில் நிகழ்த்தினார், அவரது வசீகரமான நடனத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். “ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

மேலும், ஷாருக்கானின் ஜவான் படம் இந்த வாரம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹450 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான 10வது நாளான சனிக்கிழமைக்குள், ஜவான் படம் இந்தியாவில் சுமார் ₹439 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இப்படம் புதிய மைல்கல்லை தொடும் என்று எதிர்பார்க்கிறது.  சமீபத்திய தகவலின் படி, ஜவான் அதன் இரண்டாவது சனிக்கிழமையன்று ₹31 கோடி வியாபாரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இது வியாழன் வர்த்தகத்தில் இருந்து அதிகரித்த வளர்ச்சியைக் குறிக்கிறது, இது ₹21 கோடி மட்டுமே. ஜவான் இதுவரை இந்தியாவில் ₹439 கோடியாக இருக்கும் நிலையில், ஒன்பதாம் நாளில் உலகளவில் ₹700 கோடியை தாண்டியுள்ளது. 

ஜவான் படத்தை அட்லி இயக்க இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, சஞ்சீதா பட்டாச்சார்யா, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக் ​​மற்றும் ஆலியா குரேஷி ஆகியோர் ஷாருக் அணியின் ஆறு பெண்களாக நடித்துள்ளனர். ரிதி டோக்ரா, சுனில் குரோவர், முகேஷ் சாப்ரா, யோகி பாபு மற்றும் ஈஜாஸ் கான் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News