Indian 2: விக்ரம் படம் முடிந்தவுடன் இந்தியன் 2 ஆரம்பிக்கப்படும் கமல்ஹாசன் உறுதி!

இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா விற்கும் இடைப்பட்ட மோதலால் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2021, 05:22 PM IST
Indian 2: விக்ரம் படம் முடிந்தவுடன் இந்தியன் 2 ஆரம்பிக்கப்படும் கமல்ஹாசன் உறுதி!  title=

இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா விற்கும் இடைப்பட்ட மோதலால் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது.  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.  இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன்  ரசிகர்கள் இப்படத்திற்காக ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தனர்.  லைக்கா நிறுவனம் தயாரிக்க இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  படப்பிடிப்புத் தளத்தில் துரதிஸ்டவசமாக நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  அதன்பின் கமல்ஹாசன் தனது கட்சி வேலைகளில் மும்முரமாக இருக்க மற்றும் லைக்கா நிறுவனத்திற்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை,  கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தம் போன்ற காரணங்களால் இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டது. 

தற்போது சங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை பற்றி எதுவும் பேசாமல் இருந்த கமல்ஹாசன், " இந்தியன் 2 படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது.  இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சினைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன் 2 ஆரம்பிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  மேலும் மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன்காக ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனை தவிர்த்து சித்தார்த், பிரியா பவானி சங்கர் போன்றோரும் நடிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News