கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: முந்தைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் தான் முருகன் சிலையை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என செக்மேட் வைக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2023, 01:16 PM IST
  • காணாமல் போன தீபா.
  • கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் தான் முருகன் சிலையை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என செக்மேட் வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இன்றைய எபிசோடில் தீபா கார்த்தியுடன் சிக்கிக்கொண்டு நம்ம கையாலயே சிலையை வீட்டுக்குள்ள கொண்டு போற மாதிரி ஆகிவிட்டது என புலம்பி தவிக்கிறார். இந்த சிலையை வீட்டுக்குள்ள கொண்டு வரக்கூடாதுன்னு சொன்னது நான்தான் என தவிக்கிறாள். 

மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

karthigai

இதை தவிப்புடன் என்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு ஐடியா கொடுக்க அவர் ஒரு ஐடியா சொல்ல ஐஸ்வர்யாவும் அப்படியே செய்வதாக போனை வைத்து விடுகிறாள். மறுபக்கம் கார்த்தி தீபாவை பார்க்க போக வீடு முழுவதும் தீபாவை காணாத நிலையில் ஒருவேளை வீட்டிற்கு சென்று இருக்கலாம் என மைதிலிக்கு போன் போட்டு விசாரிக்கிறான். 

மைதிலி தீபா இங்கே வரவில்லை என்று சொல்லி என்ன நடந்துச்சு என டென்ஷன் ஆகிறாள். ஒருவேளை தீபா கோவிலுக்கு சென்று இருக்கலாம் என்று சொல்லி சமாளிக்கும் கார்த்திக் ஃபோனை வைத்து கோவிலுக்கு சென்று தேடுகிறான். அங்கே பூசாரியிடம் விசாரிக்க அவர் தீபா வரவில்லை என கூறுகிறார்.  மீனாட்சியும் அங்கு பதற்றத்துடன் வந்துவிட கார்த்திக் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாண் to சிவகார்த்திகேயன்-திரை பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News