இதோ ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்... வெளியானது பேட்ட Teaser....

வெளியானது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் டீசர்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2018, 11:15 AM IST
இதோ ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்... வெளியானது பேட்ட Teaser.... title=

வெளியானது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் டீசர்....

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 68-வது பிறந்த நாள். ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் அமைப்பினர் பல தொண்டு சேவைகளை செய்து வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில் தான் அரசியலுக்கு வரபோவதாக அறிவித்தார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும். இதனால் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினியின் மிகப்பெரிய ரசிகனான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது தலைவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'பேட்ட' படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் வெளியானது....  

 

Trending News