நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. அதன்படி இன்று காலை கவினின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2023, 12:00 PM IST
  • கவின் - மோனிகா திருமணம் இன்று காலை நடைபெற்றது.
  • விஜய் டிவி புகழ், கவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமண செய்துக் கொண்டார்.
நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின் title=

கோலாகலமாக நடந்த கவின், மோனிகா திருமணம்: பிக்பாஸ் புகழ் கவினிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இன்று காலை மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது புகைப்படும் தற்போது லீக் ஆகியுள்ளன. 

பிக்பாஸ் கவின்:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ‘லிஃப்ட்’ ஏறிய நடிகர்களுள் ஒருவர் கவின். ஆரம்பத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தொடர்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்துவந்தார். அதன் பிறகு இவர் நாயகனாக நடித்திருந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து பல இளம் பெண்களின் இதயங்களை கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை பெண்கள்-குறிப்பாக இளம் பெண்களின் மத்தியில் மட்டும் பிரபலமாகியிருந்த இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பல்வேறு வயது தரப்பிரனிடமும் ரீச் ஆனார். 

மேலும் படிக்க | யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த ரஜினி... வீடியோவுக்கு ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

வெள்ளித்திரையில் கவின்..

நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். நேற்று இன்று நாளை, பீட்ஸா போன்ற படங்களில் சில மணித்துளிகள் வந்தாலும் ‘ஹே அது கவின்ல..’ என ரசிகர்களை சொல்ல வைத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. இவர் முதன்முதலாக கதாநாயகனாக ‘லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்தார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற, அடுத்து இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். 

ஜெயிலர் பட விழாவை தொகுத்து வழங்கிய கவின்..!

நடிகர் கவின், சமீபத்தில் நடைப்பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தாெகுத்து வழங்கினார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் கவின் இவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றிருப்பது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறி வந்தனர். இதே போல அவர் இன்னும் பல படங்கிளில் நடித்து பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

கவின் திருமணம்..!

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி மோனிகாவை கரம் பிடித்திருக்கிறார் நடிகர் கவின். இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் டிவி புகழ், நடிகர் கவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Kavin

 

 மேலும் படிக்க | உண்மையான இந்திய காவியம்... கண்ணப்ப நாயனாரின் கதையை தழுவி உருவாகும் மெகா பட்ஜெட் படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News