எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட்

பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 09:52 AM IST
  • பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன.
  • டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின்.
  • கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்.
எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட் title=

நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். நேற்று இன்று நாளை, பீட்ஸா போன்ற படங்களில் சில மணித்துளிகள் வந்தாலும் ‘ஹே அது கவின்ல..’ என ரசிகர்களை சொல்ல வைத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்தார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற, அடுத்து இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது.

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின்

இதனிடையே சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். அத்துடன் இந்த திரைப்படம் ஒரு காதல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் தற்போது இளன் இயக்கும் படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | ஜோஜு ஜார்ஜுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஸ்டார் பட அப்டேட்

இயக்குனர் இளன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமானவர். தற்போது இவர் நடிகர் கவின் வைத்து எடுத்து வரும் படத்திற்கு ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் தற்போது வரை 10 நாள் ஷூட் முடிவடைந்துள்ளதாகவும், படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போட்டிப் போடும் நடிகைகள்

இந்நிலையில் இளன் - கவின் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நாயகிகளிடம் கடும் போட்டி காணப்படுகிறதாம். அதில் ஒருவர் லவ் டுடே இவானா என்றும், இன்னொருவர் பேச்சுலர் நாயகி திவ்யா பாரதி எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் இவர்களில் ஒருவரை ஒப்பந்தம் செய்து படக்குழு அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. 

லவ் டுடே இவானா நடிக்கும் புதிய படம்! யார் ஹீரோ தெரியுமா?

கருப்பு உடையில் கிறுகிறுக்க வைக்கும் திவ்ய பாரதி!

ஜெயிலர் பட விழாவை தொகுத்து வழங்கிய கவின்..!

நடிகர் கவின், சமீபத்தில் நடைப்பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தாெகுத்து வழங்கினார். இதைப்பார்த்த ரசிகர்கள் கவின் இவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றிருப்பது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறி வந்தனர். இதே போல அவர் இன்னும் பல படங்கிளில் நடித்து பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

கவினுக்கு திருமணம்..!

இதனிடையே நடிகர் கவினிற்கு வரும் 20ஆம் தேதி (ஆக்ஸ்டு) திருமணம் நடைபெற இருப்பதாகவும் இவரது பெற்றாேர் இவருக்காக பெண் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியாது. இது குறித்து நடிகர் கவின் அல்லது அவரது குடும்பத்தார் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, இவரின் திருமணத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் கை கோர்க்கும் விக்ரம்..! கதாநாயகி யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News