பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் காலமானார்!

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

Last Updated : Oct 2, 2018, 09:33 AM IST
பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் காலமானார்! title=

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் தனது மனைவி மற்றும் தேஜஸ் வினி பாலா என்ற 2 வயது மகளுடன் காரில் திருச்சூர் சென்று விட்டு திரும்பினார். பள்ளிப்புரம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. 

இதில் அவரது மகள் தேஜஸ் வினி பாலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பாலபாஸ்கர், அவரது மனைவி லட்சுமி, மற்றும் கார் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் பாலபாஸ்கர், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்போது அவரது மனைவி லட்சுமி மற்றும் கார் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending News