Upcoming Tamil Movies: இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்!

Upcoming Tamil Movies: ஜெயம் ரவியின் சைரன், ரஜினியின் லால் சலாம் உட்பட பெரிய ஹீரோக்களின் படங்கள் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2024, 02:32 PM IST
  • ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்.
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவானது.
  • SunNXTல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
Upcoming Tamil Movies: இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்! title=

தமிழ் திரையுலகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகாமல் இருப்பதால் திரையரங்கிற்கு பெரிதாக ரசிகர்கள் வருவது இல்லை. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான ஜெய்லர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதன் பிறகு வெளிவந்த படங்கள் ரசிகர்களை திரையரங்கிற்கு ஈர்க்க தவறி உள்ளன. காதல் மற்றும் நட்பை வைத்து வெளியான சில படங்கள் சிறிது நாட்கள் ஓடியது. சமீபத்தில் தமிழ் படங்களை தாண்டி மலையாள படங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.  நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களில் ஏப்ரல் மாதம் சில நல்ல படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக உள்ளன.  

மேலும் படிக்க | அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகி ‘இவர்’தான்! அட நம்ம ஊர் அழகி..

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் செந்தில் முக்கிய வேடங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து இருந்த லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது.  ஆனால் சில காரணங்களால் தள்ளி போகி பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும் நீண்ட நாட்களாக படத்தின் OTT வெளியீடு குறித்து தகவல் எதுவும் வரவில்லை. லால் சலாம் படம் மார்ச் 8ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு மார்ச் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. சமீபத்திய தகவலின் படி SunNXTல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பிரேமலு

நஸ்லென் கே கஃபூர், மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிரேமலு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  மலையாளத்தில் வசூலில் வாரி குவித்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.  படம் வெளியாகி ஒரு மாதம் ஆனா நிலையிலும் நிறைய இடங்களில் ஹவுஸ் புல் ஷோ காணப்பட்டது.  இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 12 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த படத்திற்காக ஆர்வமாக உள்ளனர்.

சைரன்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான படம் சைரன். க்ரைம் த்ரில்லர் வடிவில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.  பலரும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ்காக காத்து கொண்டு இருந்த நிலையில் தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.  இந்நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 11ஆம் தேதி சைரன் வெளியாகும் என கூறப்படுகிறது.  

அனுமான்

அஞ்சனாதாரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடைபெறும் விதமாக அனுமான் படம் எடுக்கப்பட்டு இருந்தது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனுமான் படத்தின் தமிழ் பதிப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.  இப்படத்தின் ஹிந்தி பதிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | Daniel Balaji : இறந்த பின்பும் டேனியல் பாலாஜி செய்த நல்ல காரியம்..! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News