லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

விஜய், திரிஷா நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை பார்க்க தயாராக உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2023, 08:49 AM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ படம்.
  • விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ளனர்.
  • திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! title=

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை காலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு துவங்க அனுமதி கோரி பட தயாரிப்பு நிறுவனம் அளிக்கும் விண்ணப்பத்தின் மீது நேற்று மாலையே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதி மறுத்த அரசு, 19 ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்க | லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ! அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!

இந்நிலையில், அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சி திரையிடவும், அன்றைய தினத்தில் இருந்து 24 ஆம் தேதி வரை, காலை 9 மணிக்கு பதில் காலை 7 மணியில் இருந்து  காட்சிகள் திரையிட  அனுமதி கோரியும்  லியோ பட தயாரிப்பு நிறுவனமான, செவன் ஸ்கீரின் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த போது, ரசிகர் காட்சிகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, அது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அந்த வழக்கின் நிலையை தெரிந்து கொள்வதற்காக, இந்த மனு நேற்று செவ்வாய்கிழமை தள்ளிவைக்கப்பட்டது. வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, மதுரை கிளையில் இருந்து வழக்கு ஆவணங்கள் இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடந்த ஆண்டு  இளைஞர் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து, எந்த திரைப்படத்துக்கும் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், 9 மணிக்கு தான் காட்சிகள் துவங்க வேண்டும் என அரசு விதி வகுத்துள்ளதாக விளக்கமளித்தார்.  கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் காட்சிகளை திரையிட வேண்டும் என்பதை 7 மணியில் இருந்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரப்பட்டது.  நான்கு மணி  காட்சிக்கு அனுமதி மறுத்தும், 9 மணி முதல் தான் காட்சிகள் துவங்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

இதையடுத்து, அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்காக தானே திரையிடப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதி, அனுமதித்த ஐந்து காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  பின்னர், அரசாணையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்படாததால், நான்கு மணி காட்சிக்கு அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, காலை 7 மணி முதல் காட்சிகளைப்திரையிட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் அரசுக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.  அந்த விண்ணப்பத்தின் மீது மாலையே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில், தமிழக அரசை மீண்டும் நாடிய படக்குழுவிற்கு நல்ல செய்தி கிடைக்கவில்லை.  தமிழகத்தில் 9 மணி காட்சியே தொடங்கும் என்றும் 7 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News