வசூல் மழையில் மாமன்னன்! முதல் நாள் மட்டுமே இத்தனை கோடியா?

Maamannan box office collection: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் சர்ச்சைகளுடன் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 30, 2023, 01:03 PM IST
  • மாமன்னன் ஜூன் 29 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
  • இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
  • இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வசூல் மழையில் மாமன்னன்! முதல் நாள் மட்டுமே இத்தனை கோடியா?  title=

இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் வியாழக்கிழமை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் மாமன்னன். சமூக நீதிக்காக வாதிடும் இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உதயநிதி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்தொகுப்பாளராக ஆர்.கே.செல்வா பணியாற்றி உள்ளனர். சாதிவெறி அரசியல்வாதியின் கோபத்தை எதிர்கொள்ளும் அப்பாவும் மகனும் பற்றி படம் பேசுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே பம்பர் ஓப்பனிங்கைப் பெற்றது. உதயநிதியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் இந்த படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக அரசியல் சார்ந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  

மேலும் படிக்க | திமுக பண்ணுலாம் தப்பு தப்பு தான்... டக்குனு சீமான் டயலாக்கை பேசிய உதயநிதி!

 

 

மாமன்னன் படத்தில் தீவிரமான சமூக அரசியல் பேசி உள்ளனர். வடிவேலுவை ஒரு தீவிரமான பாத்திரத்தில் காட்டி அவருக்கு எதிராக ஃபஹத் பாசிலை நிறுத்தியதால் மாமன்னன் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபிஸில் எகிற செய்தது.  இப்படம் ரூ.5.50 கோடி முதல் ரூ.6.50 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதியில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், உதயநிதியின் சினிமா கரியரில் அதிக அளவு முதல் வசூல் செய்த படமும் மாமன்னன் தான் என்று கூறப்படுகிறது.  

நேற்று மாமன்னன் படம் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"மாமன்னன் படத்தின் இந்த முழு வெற்றியும் மாரி செல்வராஜையே சேரும். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம். எனது கடைசி படமான இந்த படமே எனக்கு முழுவதுமாக பூர்த்தி செய்தது. இதற்கு மேல், படம் நடிக்க 'வாய்ப்பில்லை ராஜா'. இந்த ஒரு படத்தில் நாங்கள் சமுதாயத்தை திருத்த போகிறோம் என்று சொல்லவில்லை. எங்கள் வலியை சொல்கிறோம், அதை மக்கள் புரிந்து உணர வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும். நிறைய வேலைகள் இருக்கிறது. இனிமேல் படங்கள் நடிப்பதில் வாய்ப்பில்லை" என்றார். இந்த படத்தில் இருக்கக்கூடிய கட்சி உங்கள் கட்சி போன்று உள்ளது என்று கேட்டதற்கு,"எந்த கட்சியாக இருந்தாலும் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான்" என பதிலளித்தார். பக்ரீத் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷிடம், உதயநிதி ஸ்டாலின் பிரியாணி கேட்டு கேலி செய்தார். 

மேலும் படிக்க | மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!

 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News